முஸ்லிம்களின் வாக்குகளை நீக்குமாறு மிரட்டல் தற்கொலை செய்யப்போவதாக பிஎல்ஓ புலம்பல்
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வென்ற தொகுதியில், ‘முஸ்லிம் வாக்குகளை நீக்க’ சொல்லி அழுத்தம் கொடுக்கப்படுவதாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத் தலை நகர் ஜெய்ப்பூரின் ஹவா மஹால் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலராக கீர்த்தி குமார் என்பவர் பணியாற்றுகிறார். இது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். 2023 சட்டமன்றத் தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா இத்தொகுதியில் வெறும் 974 வாக்குகள் வித்தியா சத்தில்தான் வெற்றி பெற்றார். “மகாராஜ்” என்று அழைக்கப் படும் இவர், முஸ்லிம்களைக் குறி வைத்து மத வெறுப்புப் பிரச்சாரங் கள், வன்முறைகளை செய்து வருகிறார் என ஏற்கெனவே பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில் வாக்குச்சா வடி நிலை அலுவலர் கீர்த்தி குமார் தொலைபேசியில் கத்திப் பேசும் காணொலி ஒன்று வெளி யாகியுள்ளது. அதில் மறுமுனை யில் பேசிக்கொண்டிருந்த பாஜக கவுன்சிலர் சுரேஷ் சைனி யிடம், அனைவரையுமே வாக்குப் பட்டியலில் இருந்து நீக்கி விட்டால் நீங்களும் மகாராஜும் தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விடலாமே? என அவர் ஆவேசமாக கூறும் உரையாடல் அந்த காணொலியில் உள்ளது. மேலும் “நான் கலெக்டர் அலுவ லகத்திற்குச் சென்று அங்கேயே தற்கொலை செய்துகொள் வேன்,” என்றும் மன உளைச்ச லில் அவர் கூறியதும் அக்கா ணொலியில் பதிவாகியுள்ளது. 40 சதவீத வாக்குகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, குமார் பணியாற்றும் வாக்குச்சாவடியில் உள்ள 470 வாக்காளர்களை (சுமார் 40 சதவீதம்) குறிப்பாக முஸ்லிம்க ளை நீக்க வேண்டும் என்று பாஜக வினர் அவருக்கு அழுத்தம் கொடுத்ததுடன், தனது சக்திக்கு மீறி வேலை செய்ய வற்புறுத்தப் படுவதாகவும், மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியரான குமார், ஏற்கனவே பணிச்சுமை யால் தனது மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இப்போது மூத்த அதிகாரிகள், பாஜகவினர் நீக்கச் சொல்லும் இந்த 470 முஸ்லிம்களின் படிவங்களையும் இரண்டு நாட்களுக்குள் முடிக்கச் சொல்கி றார்கள். ஒவ்வொரு படிவத்தையும் டிஜிட்டல் முறையில் ஏற்ற 10 நிமி டங்கள் ஆகும் என்றால், இதற்கு குறைந்தது 78 மணிநேரம் தேவைப்படும். மீண்டும் களத்தி ற்குச் சென்று இந்த வாக்காளர்க ளைச் சரிபார்ப்பது என்பது ஏற் கெனவே செய்த வேலையைத் திரும்பச் செய்வது போன்றது. இப்பணியை முழுமையாகச் செய்து முடிப்பது என்பது அசாதாரணமான காரியம். ஏற்கெ னவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் காரணமாக எங்கள் ரத்தம் சுண்டிவிட்டது, என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மற்றொரு அலுவலருக்கும் மிரட்டல் இதேபோல சரஸ்வதி மீனா என்ற மற்றொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர் தனது பகுதி யில் 158 முஸ்லிம் வாக்காளர்க ளை நீக்க வேண்டும் என பாஜக வினர் மிரட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் மூலமாக நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் வாக்குகளையும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளையும் தேர்தல் ஆணையம் நீக்கி வரு கிறது என்ற குற்றச்சாட்டு வலு வாக எழுந்து வருகிறது. எனினும் நாங்கள் சட்டப் படியே செயல்படுகிறோம் எனக் கூறி விட்டு தேர்தல் ஆணையம் மக்களுக்கு விளக்கம் அளிக்கா மல் ஒளிந்து கொள்கிறது. இந்நிலையில் கள நிலவரங் கள் எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் வைக்கும் குற்றச் சாட்டு உண்மை தான் என நிரூ பிக்கும் வகையில் உள்ளது.
