பத்திரிகையாளர்களை மிரட்டுவதா
அசாம் பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம்
சென்னை, ஆக. 20 - பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் அசாம் காவல்துறையினர் அனுப்பியுள்ள சம்மனுக்கு, முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது ‘எக்ஸ்’ சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். “மூத்த பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் (‘தி வயர்’) ஆகியோருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறையின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பின்னரும் இவ்வாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளன. எப்.ஐ.ஆர். நகல் வழங்கப்படவில்லை. வழக்கின் விவரங்களும் தரப்படவில்லை. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட லாம் என்ற அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது. தேசத்துரோகச் சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், அதற்காக மாற்றாக பிஎன்எஸ் சட்டப்பி ரிவு 152, பத்திரிகை சுதந்திரத்தை முடக்குவதற்குப் பயன்படுத்தப்படு கிறது. கேள்விகள் கேட்பது தேசத் துரோகமாகக் கருதப்பட்டால் ஜனநாய கம் நிலைத்திருக்க முடியாது” என்று முதல்வர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.