tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகளிலும் 15 நாள்களுக்கு பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 

அருணாச்சல பிரதேசத் தின் தவாங்கிலிருந்து 506 கிமீ வடக்கே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் வியாழ னன்று பிற்பகலில் 4.7  என்ற ரிக்டர் அளவுகோ லில் நிலநடுக்கம் ஏற் பட்டதாக தேசிய புவி யியல் ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. 

காஷ்மீரில் இந்த ஆண்டு லஷ்கரைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் உள்பட இதுவரை 26  வெளிநாட்டு பயங்கர வாதிகள் சுட்டு கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தகிரி நகரில் வன விலங்குகளின் தத்ரூப ஓவியங்களுடன் கழிப்பி டங்கள் புதுப்பொலிவு பெற்றன. பேரூராட்சி யின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறு வனம் தயாரித்த கோவாக் சின் தடுப்பூசிக்கு ஜெர்மனி அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை இந்தியாவுக்கான ஜெர் மன் தூத‌ர் வால்டர் ஜெ லின்ட்னர் தெரிவித்துள் ளார்.

சென்னையில் ரூ. 2.83  கோடி மதிப்பில் செயற்கை புல் கால்பந்து திடல் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழ னன்று அடிக்கல் நாட்டி னார்.

தில்லியின் துணைநிலை ஆளுநரான அனில் பய்ஜால், கடந்த வாரம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வினய்குமார் சக்சேனா வியாழனன்று தில்லி துணைநிலை ஆளுநராக பொறுப் பேற்றுக் கொண்டார். 

கர்நாடகாவின் மங்களூரு பல்கலைக்கழக கல்லூரி யில் இஸ்லாமிய மாண விகள் ஹிஜாப் அணிந்து  வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். ஹிஜாப் அணிய தடைவிதித் துள்ள உத்தரவை அமல் படுத்தாததை கண்டித் தும், தடைஉத்தரவை உட னடியாக கல்லூரி நிர்வா கம் அமல்படுத்தக்கோரி யும் மாணவ-மாணவிகள் வியாழனன்று போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை  தில்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி வெள்ளியன்று தொடங்கி வைக்கிறார்.

குழந்தைகளுக்கான செவிலியர்களின் எண்ணிக்கையை மேலும் தரமுள்ளதாக மாற்ற வேண்டும் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. குழந்தை களின் மையங்களில் ஒரு செவிலியரின் பொறுப்பில் நான்கு  மற்றும் ஐந்து வயதுக் குழந்தைகள் 30 பேர் ஒப்படைக்கப்படு கிறார்கள். பிரிட்டனில் உள்ள இதுபோன்ற மையங்களில் எட்டு குழந்தைகள்தான் இருக்கிறார்கள் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டி, ஜப்பானிலும் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஈரான் தொடர்பாகப் புதிய தடைகளைப் போட்டிருப்பதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய தடைகளால் ஈரானைச் சேர்ந்த பத்து தனிநபர்கள் மற்றும் 9 நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதோடு, ஈரானுடன் அணுசக்தி தொடர்பான உடன்பாடு எட்டப்படாவிட்டால், தடைகள்  மேலும் முடுக்கிவிடப்படும் என்று ஈரானுக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் மல்லி தெரிவித்துள்ளார். ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக வெளியிடப் பட்ட அரசாணைகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படு கின்றன என்று பெரு அரசு ஆய்வு செய்துள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோ, அமைச்சரவையுடன் அமர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இடதுசாரி யாக காஸ்டில்லோ பதவியேற்றவுடன் தொழிலாளர் பாதுகாப்பு  குறித்த புதிய அரசாணை வெளியானது. இது நடைமுறை யாவதை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது.

;