உச்சநீதிமன்றம் ஜனவரி மாதம் 7ஆம் தேதி மருத்து வப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு வழங்கியது சரியே என்ற வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக அமைப்புகள் எழுப்பி வந்த கோரிக்கையின் நியா யத்தினை உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள 4000க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பில் இள நிலை மற்றும் முதுநிலை வகுப்பு களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு குறித்து அறிக்கை விடுத்துள்ள பாஜக மாநில தலை வர் அண்ணாமலை, இது பாரத பிர தமர் மோடி அரசின் சாதனை என மார்தட்டிக் கொண்டுள்ளார். இத்த னை ஆண்டுகாலம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்தது மோடி அரசு தான் என்ற உண்மையை மூடி மறைக்கும் வகையிலேயே பாஜக தலைவர் அறிக்கை விட்டுள்ளார் என்பதை கீழ்க்கண்ட விபரங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
என்பவர் தொடுத்த வழக்கில் 1984ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் மூலம் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு என்பது உருவாக்கப் பட்டது. அன்றைய சூழ்நிலையில் பல மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி இல்லாத நிலையில் அனைத்து மாநிலங்களை சார்ந்த மாணவர் களுக்கும் மருத்துவ படிப்பில் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசுகளும், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களி லும் உள்ள மருத்துவ இடங்களில் இளநிலை வகுப்பில் 15 சதமான இடங்களையும், முதுநிலை வகுப்பில் 50 சதமான இடங்களையும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கு இட ஒதுக்கீடு அமலாக்குவது பற்றி அப்போது குறிப்பிடப்படவில்லை. உச்சநீதிமன்றம் 1996 ஆம் ஆண்டு அபேயநாத் என்பவர் தொடுத்த வழக்கில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு முறையே 15 மற்றும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டு அமலாக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒன்றிய கல்வி நிறுவனங்கள் (இட ஒதுக்கீடு சட்டம் 2007ன் படி ஒன்றிய கல்வி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யப் படும் இடங்களுக்கு பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு 27 சத விகிதம் அமலாக்கப்பட்டு வரு கிறது. ஆனால், மாநில மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுவிட்டது. பல முறை நாடாளுமன்றத்தில் இக்கோரிக்கையை எழுப்பிய பின்னரும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வளவுக்கும் 2000ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ கல்வி தொடர்பான விதிகளில் மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கை யின்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. (விதி 9) இதன்படி தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதமான இட ஒதுக்கீடு கொள்கை நிறை வேற்றிருக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசின் தலைமை யில் உள்ள மருத்துவ அமைப்புகள் இதை செயல்படுத்த மறுத்துவிட்டன.
இந்நிலையில், தொடர்ந்து மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சி களின் சார்பில் 29.05.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் இக்கோரிக்கை யினை வலியுறுத்தி பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டுமென 11.06.2020 அன்று தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் ஒன்றிய அரசின் மருத்துவ கவுன்சில் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதில் மனுவில், உச்சநீதிமன்றத்தில் கலோனிகுமார் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ள சூழ்நிலையில் உயர்நீதிமன்றம் இம்மனுக்களை விசாரிக்க முடியாது என கூறப்பட்டது. இந்நிலையில், 22.06.2020 அன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பிறகு வழக்கை எடுத்துக் கொள்ளலாம் என ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றம் 13.07.2020 அன்று கலோனிகுமார் வழக்கினை இந்நிலையில், தொடர்ந்து மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சி களின் சார்பில் 29.05.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் இக்கோரிக்கை யினை வலியுறுத்தி பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டுமென 11.06.2020 அன்று தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் ஒன்றிய அரசின் மருத்துவ கவுன்சில் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதில் மனுவில், உச்சநீதிமன்றத்தில் கலோனிகுமார் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ள சூழ்நிலையில் உயர்நீதிமன்றம் இம்மனுக்களை விசாரிக்க முடியாது என கூறப்பட்டது. இந்நிலையில், 22.06.2020 அன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பிறகு வழக்கை எடுத்துக் கொள்ளலாம் என ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றம் 13.07.2020 அன்று கலோனிகுமார் வழக்கினை
இந்நிலையில், தொடர்ந்து மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சி களின் சார்பில் 29.05.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் இக்கோரிக்கை யினை வலியுறுத்தி பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டுமென 11.06.2020 அன்று தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் ஒன்றிய அரசின் மருத்துவ கவுன்சில் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதில் மனுவில், உச்சநீதிமன்றத்தில் கலோனிகுமார் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ள சூழ்நிலையில் உயர்நீதிமன்றம் இம்மனுக்களை விசாரிக்க முடியாது என கூறப்பட்டது. இந்நிலையில், 22.06.2020 அன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பிறகு வழக்கை எடுத்துக் கொள்ளலாம் என ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றம் 13.07.2020 அன்று கலோனிகுமார் வழக்கினை
இதன் பின்னரே, நான்கு பேர் கொண்ட கமிட்டியின் சிபாரிசு அடிப்படையில் 27 சதவீத மான இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற ஆலோ சனையை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதனை நிறைவேற்று வதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் அனைத்தை யும் கணக்கில் கொண்டு 27 சதமான இட ஒதுக்கீட்டினை நிறைவேற்ற வேண்டுமென தீர்ப்பு வழங்கினர். அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவப் படிப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு சுமார் 20 ஆண்டுகள் ஒன்றிய அரசு இடஒதுக்கீடு வழங்காமல் இழுத்தடித்தது. அது வும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவுக்குப் பின்னரே ஒன்றிய அரசு இதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நீண்ட நெடிய தாமதத்தால், பல ஆயிரம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டது என்பது கண்டனத்திற்குரியதாகும்.
நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறத்தினர். ஆனால், பாஜகவை சேர்ந்த வர்கள் கொட்டாவி விடக்கூட வாயை திறக்க வில்லை. இயன்றவரை பிற்படுத்தப்பட்ட மாண வர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் இழுத்தடி த்தவர்கள் இப்போது சட்டப் போராட்டத்தின் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டவுடன், இது எங்களது சாதனை என ஓடி வருகிறார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமின்றி பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினருக்கும் இடஒதுக்கீடு கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கை. அதை அவ்வப்போது வெளிப்படுத்தவும் தயங்கு வது இல்லை. இந்த விஷயத்திலும் பாஜக இரட்டை வேடம் போட்டே வந்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மனு அளிக்கச் சென்ற தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து அவ மதித்தது குறித்து அண்ணாமலையின் பதில் என்ன? தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்து, தமிழ கத்தின் ஒன்றுபட்ட முயற்சிக்கு ஊறு செய்வது ஏன்? இதுதான் பாஜகவின் உண்மை முகம். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விசயத்தில் குட்டையைக் குழப்பி வந்தது ஒன்றிய பாஜக அரசு. இப்போது நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட வுடன் அது தங்களது கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறுவது எந்த வகையிலும் பொருத்தமல்ல.