tamilnadu

img

திருமானூரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு

திருமானூரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு

அரியலூர், ஜூலை 16- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில், தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தொடங்கியது.  இதில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம், தீக்கதிர் நாளிதழை வழங்கி தீக்கதிர் சந்தா சேகரிப்பில் ஈடுபட்டார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஏசுதாஸ், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன், மூத்த நிர்வாகி எ. சௌரிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.