தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் துவங்கியது
தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் சந்தாக்களை வழங்கினர். தீக்கதிரின் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி புதிய சந்தாக்களை பெற்றுக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் என்.பகுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.