மன்னார்குடி ஒன்றிய நகரப் பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
திருவாரூர், ஜூலை 17- மன்னார்குடி ஒன்றிய பகுதியில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான ஐ.வி. நாகராஜன், சந்தா பதிவினை துவக்கி வைத்தார். இதேபோல், மன்னார்குடி நகரப் பகுதியில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு பணியில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கே.பி.ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர் ஜி.முத்துகிருஷ்ணன், சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜெகதீசன், மன்னார்குடி தீக்கதிர் நிருபர் பா.தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.