தீக்கதிர் சந்தா வழங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து அரங்கம் இடைக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 16 தீக்கதிர் சந்தாக்களை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் இடைக்குழுச் செயலாளர் தி.ஏழுமலை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ஜி. அரங்கம் சார்பில் 10 தீக்கதிர் சந்தாக்களை மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமாரிடம் நிர்வாகிகள் வெ.லெனின், வி.வெங்கடேசன் ஆகியோர் வழங்கினர். மாவட்டச் செயலாளர் கே.நேரு, தீக்கதிர் பொறுப்பாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தோழர் வி.எஸ்.அச்சுதானத்திற்கு புகழஞ்சலி
சிபிஎம் முதுபெரும் தலைவர் தோழர் வி.எஸ்.அச்சுதானத்தின் மறைவையொட்டி சென்னை கேரள சமாஜம் சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா இரங்கல் உரையாற்றினார். கேரள சமாஜம் நிர்வாகிகள் சிவதாசன் பிள்ளை, டி. அனந்தன், கும்பளங்காடு உன்னி கிருஷ்ணன், இ.சர்வேசன், சந்திரசேகரன் நாயர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி கொளத்தூரில் பகுதிச் செயலாளர் பா.ஹேமா தலைமையில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் நிர்வாகிகள் ஸ்டாலின், வெங்கடேசன், சுப்பிரமணி, வெங்கட், ஜெயராமன், மூர்த்தி, வியாபாரிகள் சங்கத் தலைவர் பா.தேவராஜ் உள்ளிட்ட பலர் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.