tamilnadu

img

அரியலூரில் தீக்கதிர் சந்தா வழங்கல்

அரியலூரில் தீக்கதிர் சந்தா வழங்கல்

அரியலூர், ஆக.2 - அரியலூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவல கத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி தீக்கதிர் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் ஏ.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.  இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினரும் தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பா ளருமான ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, வி.பரமசிவம், துரைஅரு ணன், டி.அம்பிகா, கே.கிருஷ்ணன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஜெயங் கொண்டம் வெங்கடாசலம், திருமானூர் எஸ்.பி.சாமிதுரை, அரியலூர் (பொ) செயலாளர் எஸ்.மலர்கொடி மற்றும் பத்மாவதி தியாகராஜன், மூத்த தோழர் சிற்றம்பலம், சரோஜினி, ஆர்.கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஆண்டு சந்தா 26-க் கான தொகை ரூ.59,800, 5 அரை யாண்டு சந்தா தொகை ரூ.6 ஆயிரம் என மொத்தம் ரூ. 65,800, தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் ஐ.வி.நாகரா ஜனிடம் வழங்கப்பட்டது.