tamilnadu

img

காசா துயரத்திற்கு முடிவுகட்ட உலகம் ஒன்றுபட வேண்டும்!

காசா துயரத்திற்கு முடிவுகட்ட உலகம் ஒன்றுபட வேண்டும்!

முதலமைச்சர்  ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, செப். 18 - காசாவில் அரங் கேறி வரும் கொடுமை களை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார். இவ்விஷயத்தில் உலகம் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டம் கூட்டமாக புலம்பெயரும் மக்கள் 2023 அக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 65,141 பேர்  வரை கொல்லப்பட்டுள்ளனர். 165,925 பேர்  காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரக் கணக்கானோர் இடிபாடுகளுக்குள் புதைந்து விட்டதாக கூறப்படுகிறது. காசா நகரத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை மேலும் மூர்க்கத்துடன் நடத்தத் துவங்கியுள்ளது. காசாவின் மையப் பகுதியை நோக்கி இஸ்ரேலின் இரண்டு படைப் பிரிவுகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. உயிர் பிழைப்ப தற்காக, வடக்கு காசா, மத்திய காசாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம் கூட்டமாக அணிவகுத்துச் செல்கின்றனர். இதுதொடர்பான செய்திகளை ‘அல்ஜசீரா’ ஊடகம் வெளியிட்டிருந்தது.  முதலமைச்சர் வேதனை இந்தச் செய்திகளை, தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “உயி ருக்குப் போராடும் காசா, உலகம் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது!” என்று குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.  “காசாவில் அரங்கேறி வரும் கொடுமை களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன். அங்கிருந்து வெளிவரும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சைப் பதறச் செய்கிறது. பச்சிளம் குழந்தைகளின் அழுகுரல், பட்டி னியில் தவிக்கும் சிறார்கள், மருத்துவ மனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக அளித்துள்ள அறிக்கை ஆகிய அனைத் தும், எந்த மனிதரும் எப்போதும் அனுப விக்கக் கூடாத துன்பங்களை அங்கு அனு பவித்து வருவதையே காட்டுகிறது. ஒவ்வொருவரும் குரலெழுப்ப வேண்டும் அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மன சாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறு தியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண் டும். இந்தக் கொடூரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்” என்று அந்த அறிக்கையில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.