tamilnadu

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியாக குறைந்தது

ஈரோடு, ஜன.18- பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவ தால் நீர்மட்டம் 100 அடியாக குறைந்தது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கு வது பவானிசாகர் அணையாகும். பவானிசாகர் அணை மூலம்  ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங் களைச் சேர்ந்த 2லட்சத்து47ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று  வருகிறது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வரு கிறது. நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைந்துவருகிறது. மேலும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிகளவில் தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படு வதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. செவ்வாயன்று  காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 100.01அடியாக குறைந்துள்ளது.  அணைக்கு வினாடிக்கு 871 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.  அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3,100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

;