tamilnadu

img

காலிப் பணியிடம் விரைந்து நிரப்பப்படும்

சென்னை,ஏப்.19- தமிழ்நாட்டில் அரசுத்துறை யில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, விரைந்து நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று(ஏப்.19) கேள்வி நேரத்தின்போது தமிழ்நாட்டில் சார் கருவூலம் உள்ளிட்ட பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு ஆவன செய்யுமா? என்று கும்பகோ ணம் தொகுதி திமுக உறுப்பினர் க.அன்பழகன் எழுப்பிய கேள்வி களுக்கு நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் பதிலளித் தார்.  அப்போது, கால மாற்றத் துக்கு ஏற்ப அரசுத் துறையில் தற்போதிருக்கும் தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு, தேவைப்படும் புதிய பணியிடங் கள் உருவாக்கப்படும். தமிழக அரசில் காலியாக உள்ள பணி யிடங்களை கண்டறிந்து விரைந்து  நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகாலமாக கொரோனா பெருந்தொற்று, வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடக்கவில்லை. எனவே, அரசுப் பணியாளர் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப் பட்ட குழு சார்பில் இன்னும் 6 மாதங்களில் அறிக்கை தாக்கல்  செய்யப்படும். குழுவின் அறிக்கை  அடிப்படையில் தேவையான பணியிடங்கள் புதிதாக உருவாக் கப்பட்டு, காலியாக இருக்கும் பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் நிரப்பப்படும் என்றார்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு உயர்த்தப்படுமா?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை ஒன்றிய அரசு உயர்த்த போவதாக வரும் தகவல் குறித்து  சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, அரசின் கவனத் துக்கொண்டு வரப்பட்டது. இதற்கு  விளக்கம் அளித்த நிதியமைச்சர், “ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு அரசி யல் முதல் எதிரியாக காட்டிக் கொண்டவர் நமது பிரதமர் மோடி.  அன்றைக்கு குஜராத் மாநில முதல மைச்சராக இருந்தார்” என்றார். ஒரே நாடு ஒரே வரி விதிப்பு முறை கொண்டு வந்தால் அனை த்து மாநிலங்களும் வளர்ச்சி பெறும் என்று ஒன்றிய அரசு தெரி வித்தது. ஆனால், இந்த வரி விதிப்பு முறை மாநிலங்களின் உரிமையை பறித்துக்கொண்டது.  எதிர்பார்த்த வருவாய் கிடைக்க வில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற் படும் வருவாய் இழப்பை ஒன்றிய  அரசு ஈடுசெய்யும் என்று கூறிய  உத்தரவாதமும் காற்றில் பறக்க விட்டது என்று குற்றம் சாட்டி னார். தொடர்ந்து பேசிய அமைச்சர்,  ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஈடு செய்யும் திட்டம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. அதைமேலும் நீட்டிக்க வேண்டும்  என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தி லும் பிரதமர் மற்றும் அமைச்சர் களிடம் வலியுறுத்தியிருக்கி றோம். ஆனாலும் இதுவரைக்கும் எந்த பதிலும் வரவில்லை. அதேபோன்றுதான், ஜி.எஸ்.டி வரி விதிப்பு உயர்த்தப்படும் என்ற வந்துகொண்டிருக்கும் தகவலும் உறுதிப்படுத்தப்பட வில்லை. இதுகுறித்தும் தெளிவு படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.