tamilnadu

img

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பணிமனை! சீரமைக்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பணிமனை! சீரமைக்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

 கள்ளக்குறிச்சி, அக்.23– சேறும் சகதியுமாக உள்ள உளுந்தூர்  பேட்டை அரசுப் பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் வி.சாமி நாதன், மண்டல துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், பணிமனை பொரு ளாளர் சுப்பிரமணியன், மற்றும் பலர் கலந்துகொண்டு பணிமனை நிர்வாகத்தைக் கண்டித்துக்  முழக்கங்கள் எழுப்பினர். பணிமனையின் நுழைவாயிலில் தற்போது பெய்த மழையில் ஒரு வாரமாக சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது. நடத்துநர்கள், ஓட்டுநர்கள், பணிமனை ஊழியர்கள் மற்றும் பல்வேறு கிராமங்களுக்குச் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இந்தப் பணிமனையில் இருந்துதான் செல்கின்றன. குறிப்பாக மழைக்காலம் வந்துவிட்டால் இந்தப் பணி மனை முழுக்க சேறும் சகதியுமாகவும் ஆங்காங்கே குட்டைபோல தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை நீடிக்கிறது. மண்டல போக்குவரத்துக் கழக நிர்வாகமோ, உளுந்தூர்பேட்டை பணி மனை நிர்வாகம் இதனைக் கண்டுகொள்ளா மல் இருக்கின்றனர். இதனால் இங்கு பணிபுரியக்கூடிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணி யாளர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பணிபுரிந்து வரும் அனைவருக்கும் மிகச் சிரமமாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கிறது. 30 வருடங்களுக்கும் மேலாக இந்நிலைமை நீடித்து வருகிறது. தற்போது இந்தத் தொகுதியின் உடைய எம்எல்ஏவிடம் நேரில் சந்தித்து மனு அளித்தோம், எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு உடனே கவனத்தில் கொண்டு இப்பணிமனையில் நுழை வாயிலிருந்து  பணிமனை முக்கிய இடங்கள் வரை தார் சாலை அல்லது சிமெண்ட் தளம் அமைத்துத் தர வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.