கோ.வீரய்யன் வளாகம் (மதுரை), மார்ச் 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23-ஆவது மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக ஆட்டம்-பாட்டம் கொண்டாட்ட த்துடன் செவ்வாய்க்கிழமை மாலை கலை நிகழ்வு கள், கண்காட்சி திறப்பு நிகழ்வுகள் நடை பெற்றன. தாரை தப்பட்டைகள் முழங்க பறை இசை ஒலிக்க மதுரை இராஜாமுத்தையா மன்றம் அதிர்ந்தது. இளைஞர்கள் மற்றும் பெண்களின் கால்கள் நர்த்தனமாட கோடிக்கால் பூதமாம் தொழிலாளி வர்க்கத்தின் தளபதியாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு பெரும் உற்சாகத்துடன் துவங்கியது. பொதுவுடைமை இயக்கத்தின் தியாக பூமியாகச் சுடர்விடும் பெரு நகரம் மதுரையில் உதிர நிறக் கொடி. நம் உயிர் நிகர்த்த கொடி பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்கிறது. 23-ஆவது மாநில மாநாடு புதனன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்குகிறது. மாநாடு ஏப்.1-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறு கிறது.
மாநில மாநாட்டையொட்டி செவ்வா யன்று மாலை கோ.வீரய்யன் வளாகத்தில் (இராஜா முத்தையா மன்றம்) அமைக்கப் பட்டிருந்த தோழர் மைதிலி சிவராமன் நினை வரங்கத்தில் செங்கொடி இயக்க வரலாற்றுப் படக்காட்சி திறக்கப்பட்டது. நிகழ்விற்கு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து மறைந்த முது பெரும் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் நினை வரங்கில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்கா ட்சியையும் எம்.ஏ.பேபி திறந்து வைத்தார்.
“அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலை யிடும்” என்ற மாமேதை லெனின் கருத்து தாங்கிய பதாகையின் கீழ் நின்று கன்னியாகுமரி மாவட்ட முரசு கலைக் குழுவினரின் கலை நிகழ்வு மாநாடு அரங்கை அதிர வைத்தது. இந்த நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்கள் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாநாட்டுப்பிரதிநிதிகள், மதுரை மாவட்ட உழைப்பாளி வர்க்கம், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும் மதுரை மக்களவை உறுப்பின ருமான சு.வெங்கடேசன், வரவேற்புக்குழு செய லாளர் மா.கணேசன், வரவேற்புக்குழுப் பொரு ளாளர் கே.ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கண்காட்சி திறப்பு விழா நிகழ்வை மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தொகுத்து வழங்கினார்.
மாநாட்டின் முகப்பில் தான் சாய்ந்தாலும் கொடி சாயாமல் தாங்கி வளர்த்த சிறைத்தியாகி கள் கம்பீரமாய் மாநாட்டுப் பிரதிநிதிகளையும், பார்வையாளர்களையும் தலைவர்களையும் தோழர்களையும் வரவேற்றனர். அந்த தத்ரூப ஓவியத்தில் இடம் பெற்றிருந்தது சேலம் சிறைச்சாலை.
மாநாட்டுக் கொடி மதுரை வந்தது
23-ஆவது மாநாட்டில் ஏற்றப்படவுள்ள செங்கொடி 22-ஆவது மாநில மாநாடு நடைபெற்ற தூத்துக்குடி மாநகரில் இருந்து மதுரை மாநாட்டு அரங்கிற்கு வந்தது. மாநாட்டு கொடிக்கு குறுக்குச்சாலை, எட்டையாபுரம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் வரவேற்பளிக்கப்பட்டது.