tamilnadu

img

புதிய பாம்பன் கடல் பாலம் பணி 2023- மார்ச் மாதம் நிறைவடையும்

மதுரை, டிச.5- நாட்டின் பிரதான நிலப்பகுதியையும் இராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் நாட்டின் முதலாவது செங்குத்து நிலையி லான லிப்ட் ரயில்வே பாலம் பணிகள் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லிப்ட் ரயில்வே பாலத்தை ரயில்  விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் ரூ.535  கோடி மேற்கொண்டு வருகிறது. இப்பணி கள் நிறைவடைந்தால் ரயில்களை அதிக வேகத்தில் இயக்க முடியும் ரயில்வே நிர்வா கம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாம்பன் ரயில் பாலம்  105 ஆண்டுகள் பழமையானது. மன்னார்  வளைகுடாவில் அமைந்துள்ள இராமேஸ்வரம் தீவுடன் மண்டபத்தை இணைக்க 1914- ஆம் ஆண்டு இந்தப் பாலம் கட்டப்பட்டது. 1988-ஆம் ஆண்டு வாக னங்கள் சென்றுவரும் வகையில் மேம் பாலம் கட்டப்பட்டது. புதிய லிப்ட் ரயில்வே  பாலம் பணிகள் 84 சதவீதம் நிறைவ டைந்துள்ளது.

;