tamilnadu

img

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்

தஞ்சாவூர், ஜன.28- சிறுபான்மை  கல்வி நிறுவனங் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்  என்று மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் உறுதி யளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய  இருதய மேல்நிலை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவ காரத்தில், ஆர்எஸ்எஸ்-பாஜக மதவாத சக்திகள், மதப் பதற்றத்தை உரு வாக்கும் நோக்கில் செயல்பட்டு வரு கின்றன. இவர்களின் செயலுக்கு அர சியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை தெரி வித்தன. இந்நிலையில் ஜனவரி 28 வெள்ளிக் கிழமை காலை கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை யில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும்,கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னத்துரை,  மாநிலக் குழு உறுப்பினர் கோ.நீல மேகம், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய குழு, மைக்கேல்பட்டி சென்று தூய இருதய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். 

அப்போது மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களிடம் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களுக்கும்,  சிறுபான்மை கல்வி நிறுவனங் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாப்பு அரணாக செயல்படும். நடந்த சம்பவத்தில் இந்துத்துவா சக்தி கள் குறுகிய அரசியல் கண்ணோட்டத் தோடு மதப் பதற்றத்தை உருவாக்கி  அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்ற னர். அவர்களுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. பாஜக உள்ளிட்ட மதவாத சக்தி கள் குறுகிய அரசியல் லாபத்திற்காக, இந்த விஷயத்தில் தவறாக வழிநடத்து கின்றனர். அதனை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. இந்த விவ காரத்தில் தமிழக அரசும், காவல் துறை யும் நேர்மையான விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உங்களுக்கு துணை நிற்கும்” என்று  தெரிவித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுக்கு பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்  வருகையையொட்டி, திருவையாறு டிஎஸ்பி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாது காப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். 

 

;