tamilnadu

அதிமுக விட்டுச்சென்ற கடனுக்கு வட்டி மட்டும் ரூ. 1.4 லட்சம் கோடி! நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

அதிமுக விட்டுச்சென்ற கடனுக்கு வட்டி மட்டும் ரூ. 1.4 லட்சம் கோடி! நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை, அக். 16 - தமிழ்நாடு சட்டப்பேர வையில், வியாழக்கிழ மை (அக்.16) நடந்த விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் தங்கமணி எழுப்பிய கேள்விக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அப்போது, 2020-2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கால முடி வில் வாங்கப்பட்ட கட னுக்கு திமுக அரசு வட்டி கட்டி வருவதாக தெரிவித் தார். குறிப்பாக, அதிமுக விட்டுச்சென்ற கடனுக்கு வட்டியாக மட்டும் ரூபாய் 1.4 லட்சம் கோடி கட்டியுள்ளதாக அவர் கூறினார். அதிமுக ஆட்சியில் மொத்த கடன் இருப்பு 128 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டில் 93 சத விகிதம் மட்டுமே கடன் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 128 சதவிகிதம் அதிகமா, 93 சதவிகிதம் அதிகமா, என்று கேட்ட அமைச்சர் தங்கம் தென் னரசு, மொத்தக் கடன் இருப்பை 128 சதவிகித மாக அதிகரிக்கச் செய்த அதிமுகவினருக்கு கடன் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்றார்.