tamilnadu

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்தது இந்திய அரசு!

புதுதில்லி, மே 14- கோதுமை விலை கடுமை யாக உயர்ந்ததன் பின்னணியில், இந்தியாவிலிருந்து வெளிநாடு களுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய  ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. கோதுமையை இருப்பு வைப்பதற் கும் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசனையில் இறங்கியுள்ளது. கோதுமை உற்பத்தியில் உக்  ரைன், ரஷ்யா ஆகியவை முன்னணி வகிக்கும் நாடுகளாகும். ஆனால், உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்  தம் காரணமாக, உக்ரைன், ரஷ்யா நாடுகளிலிருந்து கோதுமை கிடைப் பது தடைபட்டு, உலகளவில் கோது மைக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி யது.'

இதனால், உலக நாடுகள் தங்க ளின் கோதுமைத் தேவைக்கு, இந்தி யாவை நாட ஆரம்பித்தன. இந்தத் தேவையை பயன்படுத்திக் கொண்ட  இந்திய ஏற்றுமதியாளர்களும், உலக நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்யத் துவங்கினர். இந்  திய அரசும், அந்நியச் செலாவணி யை கருத்தில் கொண்டு, கோதுமை ஏற்றுமதிக்கு தாராளமாக அனு மதி வழங்கியது. இதனால், கடந்த 2 மாதங்களாக இந்தியாவின் கோதுமை உள்ளிட்ட உணவு தானி யங்களின் ஏற்றுமதி கணிசமாக அதி கரித்தது. ஏப்ரல் மாதத்தில் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன் அளவிற்கு உயர்ந்தது.  ஏற்றுமதித் தேவையைக் கருத் தில் கொண்டு வர்த்தகர்கள் பலர், இந்திய விவசாயிகளிடம் கோதுமை யை மொத்தமாக வாங்கி இருப்பு வைக்க ஆரம்பித்தனர். அரசாங்கத்  தின் கொள்முதலுக்கு தேவையான கோதுமை வெகுவாக குறைந்தது. அல்லது தேவையான கோதுமை யை கொள்முதல் செய்வதில் ஒன்றிய அரசு அலட்சியமாக நடந்து கொண்  டது.

இதனால் ஒருகட்டத்தில் உள் நாட்டிலேயே கோதுமைக்கு பற்றாக் குறை ஏற்படத் துவங்கியது. இது கோதுமை மற்றும் கோதுமை மாவின்  விலைகள் அதிகரிப்புக்கு வழிவகுத்  தது. சாகுபடி வீழ்ச்சி காரணமாக, இந்  தியாவில் ஏற்கெனவே கோதுமை மாவின் அகில இந்திய சராசரி தின சரி சில்லரை விலை, காலண்டர் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகரிக்கத் துவங்கியிருந்தது.  கோதுமைக்கான சில்லரை விலைப் பணவீக்கம் ஜனவரி மாதமே 5.81 சதவிகிதமாக இருந்த நிலையில், ஏற்றுமதிக்குப் பிறகு, மார்ச் மாதத் தில் அது 7.77 சதவிகிதமாக உயர்ந்  தது. பேக்கரி ரொட்டிக்கான சில்ல ரைப் பணவீக்கம் 8.39 சதவிகிதமாக அதிகரித்தது.

இந்தியாவில் கோதுமை மாவு விலை ஏப்ரல் மாதத்தில் சராசரியாக கிலோ ஒன்று 32 ரூபாய் 38 காசு களாக உயர்ந்தது. இது கடந்த 12  ஆண்டுகளில் இல்லாத அளவிற் கான கடுமையான விலை உயர்வாக மாறியது.  கோதுமை மாவின் அகில இந்திய சராசரி சில்லரை விலை மே 7-ஆம் தேதியன்று கிலோ 32 ரூபாய் 78 காசு களாக இருந்தது. இது கடந்த ஆண்  டின் விலையான 30 ரூபாய் 03 காசுகள்  என்ற விலையிலிருந்து 9.15 சதவிகி தம் அதிகம்.  கோதுமை மாவின் சில்லரை விலை சராசரியாக மும்பையில் கிலோ  49 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந் தது. சென்னையில் 34 ரூபாய், கொல்கத்தாவில் 29 ரூபாய், தில்லி யில் 27 ரூபாய் என்ற உயர்வை எட்டியது.

சில்லரைப் பணவீக்கம் எனப் படும் நுகர்வோர் பணவீக்க (Consumer  Price Inflation) விவரங்களை மத்  திய புள்ளியியல் மற்றும் திட்ட அம லாக்கத்துறை அமைச்சகம் வியாழ னன்று வெளியிட்டது. அதிலும், உண வுப் பொருட்களுக்கான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.68 சதவிகிதமாக இருந்தது, ஏப்ரலில் 8.38 சதவிகித மாக உயர்த்து விட்டதாக குறிப்பிடப்  பட்டு இருந்தது. இதுதொடர்பாக கருத்து தெரி வித்திருந்த ‘பாங்க் ஆப் பரோடா வின் தலைமைப் பொருளாதார நிபு ணர் மதன் சப்னாவிஸ், ‘‘உணவுப் பொருட்களின் பணவீக்கம் 8.4 சத விகிதத்தை எட்டியிருப்பதற்கு, கோதுமை உள்ளிட்ட தானியங்களின் ஏற்றுமதி மற்றும் இவற்றின் சாகு படியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே கார ணம்’’ என்று தெரிவித்திருந்தார்.  கோதுமை ஏற்றுமதியை உடனடி யாக கட்டுப்படுத்த வேண்டும் என் றும் பொருளாதார வல்லுநர்கள் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த பின்னணியிலேயே, கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்து ஒன்றிய அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று மாலை  இதுதொடர்பாக அறிக்கை யொன்றை வெளியிட்ட வெளிநாட்டு பொது வர்த்தக இயக்குநரகம் (Directorate General of Foreign  Trade - DGFT), “கோதுமை ஏற்று மதிக்கு உடனடி தடை அமலாகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. “மே 13 ஆம் தேதிக்கு முன்னதாக கோதுமை ஏற்று மதி ஒப்பந்தங்கள் (Irrevocable Letter Of Credit - ILOC) நிறை வேற்றப்பட்டிருந்தால், அவற்றின் படியான ஏற்றுமதிகள் மட்டும் அனு மதிக்கப்படும்” என்று தெரிவித் துள்ள வெளிநாட்டு பொது வர்த்தக  இயக்குநரகம், “அண்டை நாடுகள்  ஏதேனும் கோதுமை கோரியிருந் தால், ஒன்றிய அரசு அனுமதியுடன் எந்த நாடு கோரியுள்ளதோ அதற்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கோதுமை ஏற்றுமதி செய்யலாம்” என்றும் கூறியுள்ளது. 

வெங்காய விதைகளுக்கும் தடை

இந்தியாவில் கோதுமையை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்கவும் ஒன்றிய அரசு பரி சீலனை செய்து வருகிறது. மற்றொரு புறத்தில் வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் மதிப்பீட்டின்படி, 2021-22-ஆம் ஆண்டில் ஏழு மில்லி யன் (70 லட்சம்) டன்கள் கோதுமை யை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. (இதன்  மதிப்பு 2.05 பில்லியன் அமெரிக்க  டாலர்கள் ஆகும்) அதேபோல 2022-23 நிதியாண்டில் பத்து மில்லி யன் (1 கோடி) டன் தானியங்களை ஏற்றுமதி செய்வதென இந்தியா இலக்கு  நிர்ணயித்திருந்தது. கோதுமை ஏற்று மதியை அதிகரிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய மொரா க்கோ, டுனிசியா மற்றும் இந்தோனே சியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு இந்தியா வர்த்தகப் பிரதிநிதிகளை அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது ஏற்றுமதிக்கு தடை விதிக்க  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது.