நியூயார்க்,ஏப்.2- அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறு வனத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழி யர் ஒருவரின் முயற்சியால் முதன்முறை யாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கிலுள்ள அமேசான் நிறுவன குடோனில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென பணிநீக்கம், போதிய சம்பளம் வழங்காதது உள்ளிட்ட புகார்களை அமே சானுக்கு எதிராக கூறிவந்த ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்தனர். இதனைத் தடுக்க அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பி னும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தேர்த லில் அமேசான் ஊழியர்கள் வெற்றி பெற்றனர். உலகின் முன்னணி நிறுவனமாகவும் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நிறு வனமுமான அமேசானில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டிருப்பது தொழிலாளர் உரி மைக்கான போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள அமேசான் நிறு வன கிளைகளில் தொழிற்சங்கம் அமைய இது வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. தொழிற்சங்கம் அமைக்கும் முடிவு ஏமாற்ற மளிப்பதாக தெரிவித்துள்ள அமேசான் நிறு வனம், பணியாளர்களுடன் நேரடி தொடர் பில் இருப்பதையே விரும்புவதாக தெரி வித்துள்ளது.