tamilnadu

img

தேர்தல் களத்தில் காணாமல் போன விஜயதாரணி

நாகர்கோவில், ஏப்.20- விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 3 முறை பொறுப்பு வகித்த விஜயதாரணி காங்கி ரஸ் கட்சியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி பாஜகவில் கடந்த மாதம் ஐக்கிய மானார். பெரும் எதிர்பார்ப்போடு சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தல் களத்தில் காணாமல் போன வர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் விஜயதாரணி. தில்லியில் வழக்கறிஞராக பணி யாற்றிய விஜயதாரணிக்கு கடந்த 2011ஆம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்கள் மணி சகோதரர்கள் பல முறை வெற்றிபெற்ற தொகுதி இது.  சட்டமன்ற வேட்பாளராக வாய்ப்பு  கிடைத்ததும் தன்னை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி என்று அடையாளப்படுத்தினார். அதன் பின்னர் தான், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி கிடையாது, அவரது தூரத்து உற வினர் விஜயதாரணி என்பது தெரிய வந்தது. அப்படியும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால், தில்லி வாசியான அவரது ஆர்வம் நாடாளுமன்ற உறுப்பி னராக வேண்டும் என்பதாக இருந்து வந்தது. ஆனால் 2019 பொதுத்  தேர்தலி லும், எச்.வசந்தகுமார் மறைவைத் தொ டர்ந்து வந்த இடைத்தேர்தலிலும் அவரது விருப்பம் நிறைவேறாத அதிருப்தியுடன் இருந்தார். இம்முறை யும் தனக்குநாடாளுமன்ற உறுப்பின ராக வாய்ப்பில்லை என தெரிந்ததும் தில்லியில் பாஜக தலைவர்களை தொ டர்பு கொண்டதுடன் கட்சி தாவினார். அங்கும் தனக்கு வாய்ப்பு கிடைக் காத நிலையில் வேறு வழியில்லாமல் பாஜகவில் தேர்தல் பணியாற்ற களத்து க்கு வந்தார். பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுடன் அழை யாத விருந்தாளிபோல் ஒருநாள் மட்டும் பிரச்சார வாகனத்தில் ஏறினார். சற்று நேரத்தில் காணாமல் போனவர் கடைசி வரை கண்ணில் படவில்லை என்கிறார்கள் பாஜகவினர். விஜயதாரணி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடந்த விள வங்கோடு சட்டமன்ற இடைத்தேர்த லில் காங்கிரஸ் கட்சி தாரகை கத் பர்ட்க்கு வாய்ப்பளித்தது. அவருக்கு இந்தியா கூட்டணி கட்சியினரிடமும் வாக்காளர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாடாளுமன்ற கனவுடன் கட்சி தாவிய விஜயதாரணிக்கு ஏமாற்றமே கிடைத்தது. எப்படியோ மக்களுக்கு அன்னியமான ஒரு நபரை பாஜக தத்தெடுத்து நட்டாற் றில் விட்டதில் விளவங்கோடு வாக்கா ளர்களுக்கு மகிழ்ச்சியே.

;