வாக்காளர்களை நீக்கும் ஆணையமாக மாறிப்போன இந்திய தேர்தல் ஆணையம்
பிருந்தா காரத் சாடல்
திருநெல்வேலி, செப். 11 - மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல் லை சந்திப்பில் உள்ள அவ ரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ் கரன், மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிருந்தா காரத், “பார தியாரின் மகத்தான மதநல்லி ணக்க - மக்கள் ஒற்றுமை மர பையும் இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்த அவரது பார்வையையும் முன்னெ டுத்துச் செல்ல நாம் அனை வரும் உறுதி ஏற்க வேண் டும்; கெடுவாய்ப்பாக, இன்று இந்தியாவை ஆளும்சக்தி கள் பன்முகத்தன்மைக்கும் பாரதியாரால் பிரதிநிதித்துவ ப்படுத்தப்பட்ட ஒருமைப் பாட்டுச் சிந்தனைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும் எதி ரானவர்களாக உள்ளனர்” என்றார். “இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழகத்திற்குள் வர முயற்சிப்பதை காண்கி றோம். இந்த சக்திகள் இந்திய அரசியலமைப்பு, நாடாளுமன்ற ஜன நாயகத்தின் விதிமுறைகள், மதச்சார்பின்மை, ஜன நாயகம் மற்றும் இந்திய மக்க ளின் சமத்துவத்தை இழிவு படுத்துகின்றன. சாதி மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும் இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலையை அச்சுறுத்தும் நச்சுத்தன்மை வாய்ந்த இரட்டையர்களாக உள்ளன” என்று கூறினார். “1950-களில் பாபா சாகேப் அம்பேத்கர், இந்துச் சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். திரு மணத்திற்கு சாதியை ஒரு நிபந்தனையாக்குவதை அவர் அகற்றினார். ஆனால் இன்று அந்த சீர்திருத்தத்தை மாற்றியமைத்து இந்திய அரசியலின் மையத்திற்கு மீண்டும் சாதியைக் கொண்டுவர விரும்பும் சக்தி களை காண்கிறோம்” என்றார். திருநெல்வேலியில் சமீ பத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வ கணேஷ் மரணத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிருந்தா காரத், “இது சாதி வெறி மற்றும் இந்தியா வில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த சாதிய அமைப்பு க்கு எதிரான போராட்டத்தில் நடந்த உயிர்ப்பலியாகவே பார்க்கிறோம்” என்றதுடன், “ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று வலியுறுத்தினார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய பிருந்தா காரத், “பீகா ரில் வாக்குப்பதிவு முறை யை முற்றிலுமாக சீர்கு லைக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. இது பிரிட்டிஷ் காலனித்துவ கால த்தை நினைவூட்டுகிறது. தேர்தல் ஆணையம் வாக்கு களை உறுதி செய்வதற்குப் பதிலாக வாக்காளர் நீக்கும் ஆணையமாக செயல்படு கிறது” என்று விமர்சித்தார்.