tamilnadu

img

தேர்தல் நடைமுறைகள் மீது வலுக்கும் சந்தேகம் அச்சங்களை தேர்தல் ஆணையம் தீர்த்து வைக்க வேண்டும்!

தேர்தல் நடைமுறைகள் மீது வலுக்கும் சந்தேகம் அச்சங்களை தேர்தல் ஆணையம் தீர்த்து வைக்க வேண்டும்!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறிக்கை

புதுதில்லி, ஆக.9- அரசியல் கட்சிகள் மற் றும் பலர் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு, உரிய விளக்  கத்தை உடனடியாக அளிக்க  வேண்டும் என்றும்; இது  இந்திய தேர்தல் ஆணை யத்தின் கடமை! என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்  கையில் கூறப்பட்டிருப்பதா வது: சமீபத்திய தேர்தல் செயல்முறைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி களும், மற்றவர்களும் எழுப்பியுள்ள பல்வேறு  ஐயங்களைத் தெளிவ படுத்தி, மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மீது ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையை மீட்டெடுக்க, உரிய நடவடிக்கைகளை அவசரமாக எடுக்கு மாறு என்று இந்தியத் தேர்  தல் ஆணையத்தை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சமீப காலங்களில், தேர்தல்களின் நியாயத் தன்மை குறித்து கடுமை யான கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. குறிப்பாக பீகா ரில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் உள்ள முறை கேடுகள் துவங்கி, மகா ராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத் தேர்தல்களில் காணப்பட்ட முறைகேடுகள் வரை, இவை அனைத்தும் ஆளும் கட்சிக்கு சாதகமா கவே தெரிகிறது. ஆளும் கட்சியின் துணை  அமைப்பாகச் செயல்படா மல், எதிர்க்கட்சிகள் எழுப்  பும் பிரச்சனைகள் குறித்து  முழுமையான விசாரணை களை மேற்கொள்வதும், அர சியலமைப்புச் சட்டத்தின் கீழ் சுயேச்சையாக இயங்கும்  ஒரு வெளிப்படையான மற்  றும் பாரபட்சமற்ற அமைப்பு  என்பதை மக்களுக்கு நிரூ பிப்பதும் தேர்தல் ஆணை யத்தின் கடமையும் பொறுப்  பும் ஆகும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை யில் கூறியுள்ளது. (ந.நி.)