tamilnadu

நெல் கொள்முதல் தாமதத்திற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்

நெல் கொள்முதல் தாமதத்திற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்

தஞ்சாவூர், அக். 22 - “விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய  செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட கால தாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்கக் காரணம்”  என தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கர பாணி விளக்கமளித்துள்ளார். தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் அமைந் துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்  துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆய்வு மேற் கொண்டார். அவருடன் அமைச்சர்கள் கோவி. செழியன், சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரும் ஆய்வில் கலந்துகொண்டனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தி யாளர்களைச் சந்தித்து அமைச்சர் அர. சக்கரபாணி  பேசியதாவது:  தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டு 299 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுவரை 1.06 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம்  மெ.டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட  வேண்டி உள்ளது. 8,600 ஹெக்டேர் அறு வடைக்குத் தயாராக உள்ளன.  இந்த ஆண்டு சாகுபடி பரப்பு சுமார் 79,800 ஹெக்டர் ஆகும். சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் 61 ஆயிரம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தினமும் 1,250 லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு நெல்மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் ரயில் வேகன்கள் மூலமும் நெல் மூட்டை கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சாக்குகளைப்  பொறுத்தவரை 14 லட்சம் சாக்குகள் கை யிருப்பில் உள்ளன. மேலும் 66 லட்சம் சாக்குகள்  வந்து கொண்டிருக்கின்றன. நான்கு வாடகைக் கிடங்குகளில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாட்டில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு அமைக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஒரத்த நாட்டில் தினமும் 5 ஆயிரம் மூட்டைகள் கொள்முத லுக்காக தானியங்கி இயந்திரம் சோதனை முறை யில் தொடங்கப்பட்டுள்ளது.  விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், 100 கிலோ அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி  கலக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை மாற்றி கடந்த 29-7-2025 அன்று ஒன்றிய அரசி டம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்தது. அதன் பின்னர் டெண்டர் விடப்பட்டு 5 ஒப்பந்தக் காரர்கள் மூலம் விவசாயிகளிடம் பெறப்பட்ட 34  ஆயிரம் டன் நெல்லில், 100 கிலோ அரிசிக்கு 1  கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலப்ப தற்காக, தில்லிக்கு அரிசியை அனுப்பியுள்ளனர். இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து அந்த அனு மதி வரவில்லை. எனவே நெல் மூட்டைகள் தேங்கி யதற்கு ஒன்றிய அரசுதான் காரணம். இது தெரி யாமல் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி ஏதேதோ பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர், விவ சாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் 800 மூட்டையிலிருந்து 1,000 மூட்டையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 60 மூட்டையிலிருந்து 70 மூட்டை வாங்குவதற்கான விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு களாக விவசாயிகளுக்கு வழங்கப்படாத ஊக்கத் தொகை தற்போது வழங்கப்படுகிறது. நெல்லுக் கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று  மடங்கு கூடுதல் விளைச்சல் கிடைத்துள்ளது. 9  லட்சம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அர. சக்கரபாணி தெரி வித்துள்ளார்.