வாக்காளர் திருத்தம் என்ற ஆபத்து தமிழ்நாட்டுக்கும் வரலாம்
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி எச்சரிக்கை
திண்டுக்கல், ஆக. 1 - திண்டுக்கல்லில் வியாழனன்று தீக்கதிர் சந்தா வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆற்றிய உரையின் பகுதிகள்: நாடாளுமன்றத்தில் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் “பிரதமர் மோடி முக்கியமான விவாதம் நடைபெறும்போதெல்லாம் வெளிநாடு களுக்குச் சென்றுவிடுவார். அவர் பதில் சொல்ல வேண்டியவற்றைக்கூட அமைச்ச ர்களை வைத்து சொல்ல வைக்கிறார்கள். மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை எப்படி பேசவிடாமல் கூச்சல் போட்டர்களோ, அதுபோன்று பிற எம்.பி.க்களையும் பேச விடுவதில்லை. விவாதியுங்கள் - ஆனால் அம்பானி, அதானி பற்றி பேசாதீர்கள்.
ஆபரேசன் சிந்தூர் பற்றி விவாதியுங்கள் - ஆனால் டிரம்பின் பங்கு பற்றி கேட்காதீர்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி சொல்லாதீர்கள். இப்படித்தான் பாஜகவினர் நாடாளுமன்றத்தை நடத்துகிற விதம்.” வாக்காளர் பட்டியல் திருத்தம் - ஜனநாயக விரோத அரசியல் “பீகார் தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ள வழிகாட்டுதல்கள் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. ஆதார் கார்டு, ரேசன் கார்டு, 100 நாள் வேலை அட்டை, பான் கார்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறது ஆணையம். மெட்ரிகுலேஷன் சர்டிபிகேட்டை ஆதாரமாகக் கேட்கிறது. பீகாரில் பாதி மக்கள் படிப்பறிவற்றவர்கள் - அவர்களிடம் மெட்ரிகுலேஷன் சர்டிபிகேட் எப்படி இருக்கும்? தேர்தல் ஆணையம் கொடுத்த வாக்காளர் அடையாள அட்டையைக்கூட ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்களாம். முன்பு இருந்த தேர்தல் ஆணை யம் கொடுத்த வாக்காளர் அடை யாள அட்டைகள் பொய்யானவை என்கிறது ஆணையம்.” மிரட்டும் புள்ளிவிவரங்கள் “ஜூன் 24ஆம் தேதி நோட்டிபிகேஷன் கொடுக்கப்பட்டது. அதற்குள் 65 லட்சம் பேரை போலி வாக்காளர்கள் என்று கண்ட றிந்து வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி யுள்ளது தேர்தல் ஆணையம்.
ஒரு மாதத்திற்குள் 7 கோடி பேரிடம் விசாரிக்க முடியுமா? இந்தியா போன்ற நாடுகளில் இது சாத்தியமா?” தமிழ்நாட்டுக்கான எச்சரிக்கை “இந்த ஆபத்து பீகார் மாநிலத்திற்கு மட்டும் வரவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் அனைத்து மாநில தேர்த ல்களுக்குமான ஆபத்து. தமிழ்நாட்டு தேர்தல் உட்பட எல்லா தேர்தல்களுக்கும் இதுதான் பொருந்தும். அனைவருக்கும் வாக்குரிமை என்ற கோட்பாடு சிதைக்கப்பட்டு சிலருக்குத்தான் வாக்குரிமை என்ற நிலைக்கு செல்கிறது.” மகாராஷ்டிராவில் பாசிஸ்ட் சட்டம் “மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி ‘பப்ளிக் சேஃப்டி ஆக்ட்’ என்ற கொடூரச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அர்பன் நக்சல்கள் என்று அரசு சந்தேகிக்கும் எந்த அமைப்பையும் தடை செய்யலாம். அந்த அமைப்பில் இருப்பவர்களுக்கு 2 முதல் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை, 2 முதல் 5 லட்சம் வரை அபராதம். நாளை தடை செய்யப்படும் அமைப்பாக சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மத்திய அரசு தொழிற் சங்கங்கள் இருக்கலாம். இது ஒரு பாசிஸ்ட் போக்கு.” சிபிஎம் எம்.எல்.ஏ.வின் தனிமைப் போராட்டம் “மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் உள்ள ஒரே ஒரு சிபிஎம் எம்.எல்.ஏ. வினோத் நிகோலே இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து உரையாற்றினார். மற்ற உறுப்பினர்கள் பேசவில்லை. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களிடம் ஏன் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை என்று போன் மூலம் கேட்டபின், சுதாரித்து மேலவையில் எதிர்த்தார்கள்
.” “இந்த சட்டத்தை எதிர்த்து மும்பை நகரத்தில் இடதுசாரிகள் இணைந்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள். அதில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.” கார்ப்பரேட் நலன்களுக்கான அரசியல் “மகாராஷ்டிரா மாநிலத்தில் நூற்றுக் கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க உள்ளார்கள். இதை எதிர்த்து விவசாயிகள் போராடுவார்கள். செங்கொடி இயக்கம் கண்டிப்பாக போராடும். அதை தடுக்க இந்த சட்டத்தை முன்கூட்டியே கொண்டுவந்துவிட்டால் அர்பன் நக்சல்கள் என்று சொல்லி போராடும் இயக்கங்களை தடை செய்து அனைவரையும் சிறையில் தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.” இஸ்ரேல் - கார்ப்பரேட் கூட்டணி “இஸ்ரேல் செய்யும் அநியாயங் களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் துணை போகின்றன என்பதை ஐ.நா. அதிகாரி பிரான்சிஸ்கா அல்பானிஸ் அம்பலப்படுத்தி யுள்ளார். பெருமுதலாளிகள் மனிதப் பேரழிவைக்கூட லாபகரமான வியாபாரமாக மாற்றுகிறார்கள்.
இஸ்ரேல் கொன்று குவித்தவர்களில் 34 விழுக்காட்டினர் சாதாரண ஏழை எளிய மக்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதாரண மக்கள் கூடும் இடங்களில் உள்ளவர்கள் எல்லோரும் ஹமாஸை சேர்ந்தவர்கள் என்று கருதி குண்டு போடச் சொல்லி கட்டளையிடப்படுகிறது.” மார்க்சிஸ்ட்டுகளின் செயல்பாடு “எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் சீமானும் ‘கம்யூனிஸ்ட்டுக்கள் எங்கே இருக்கிறார்கள்’ என்கிறார்கள். கம்யூ னிஸ்ட்டுக்கள் எங்கும் இல்லை என்றால் இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கால கட்டத்தில் மிகச் சிறப்பாக செயலாற்றி யுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. இவர்களுக்கு மத்தியில்தான் நாம் மக்களுக்கான அரசியலை முன்னெடுக் கிறோம். நாம் இந்த பாஜக-அதிமுக கூட்டணியை அம்பலப்படுத்த வேண்டும்.”