முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! க.கனகராஜ் பேட்டிதூத்துக்குடி, ஜூலை 29 - பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் கூடு தல் கவனம் செலுத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வலியுறுத்தினார். தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தில் உள்ள கவின் செல்வகணேஷின் இல்லத் திற்கு நேரில் சென்று, அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய க. கனக ராஜ், பின்னர் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது, இதனைத் தெரிவித்த அவர், அகில இந்திய அளவில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழ க்குகளில் 97 சதவிகிதம் குற்றம் நிரூபிக்கப்படாத நிலைமை இருப்பதை சுட்டி க்காட்டி, தமிழக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆணவப் படுகொலை களுக்கு தனிசிறப்புச் சட்டம் இயற்றவேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக் கை வைத்து வருவதாக வும், தமிழகத்தில் சிறு முன்னேற்றங்கள் வந்தா லும் சாதிப் பாகுபாடு கார ணமான கொலைகள் தொட ர்ந்து நடப்பதாகவும் கூறினார். இளைஞர் கவின் செல்வ கணேஷ், பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். சிறு கிராமத்தில் இருந்து, தனது படிப்பால் முன்னேறியவர். அப்படிப் பட்டவர் படுகொலை செய் யப்பட்டது, சமூகத்திற்கு பேரிழப்பு என்றும் க. கனக ராஜ் குறிப்பிட்டார்.