tamilnadu

img

வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்

வாக்கு திருடர்களை  தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்

வாக்கு திருட்டில் ஈடுபடு வோரைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்க ளவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.  இதுதொடர்பாக தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் கூறுகையில்,”ஜனநாயக அமைப்பில் பங்கேற்பது தான் எனது வேலை. பாதுகாப்பது எனது வேலை அல்ல. தேர்தல் ஆணையம் போன்ற நிறு வனங்களின் வேலை அது. அவர்கள் பாதுகாக்காததால், அந்த வேலையை நான் செய்கிறேன். அனைத்து இடங்களிலும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆதாரமின்றி எதையும் கூறவில்லை; எதிர்க்கட்சி என்ப தால் முழு ஆதாரத்துடன்தான் கூறுகி றேன். 100% ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டையே நான் முன்வைக்கி றேன். நாட்டில் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும், இந்தியா முழுவதும் லட்சக்க ணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சிகளு க்கு வாக்களிக்கும் சிறுபான்மையினர், தலித், பழங்குடியினர், ஓபிசி உள்பட சில சமூகத்தைச் சேர்ந்த மக்களை குறி வைத்து இது நடத்தப்படுகிறது. தற்போது 100% ஆதாரங்கள் கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள ஆலந்த் சட்ட மன்றத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்கா ளர்களை நீக்க யாரோ முயற்சித்துள்ள னர். அவர்கள் தற்செயலாக பிடி பட்டுள்ளார்.   வாக்காளர் பெயர்களை நீக்குவ தற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தானியங்கி செயலிகள் மூலம் செய்யப் படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக ளிலும் உள்ள முதல் வாக்காளரை தேர்ந்தெடுத்து, நீக்குவதற்கான ஆன் லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட் டுள்ளது. இது கால் சென்டர் மூலம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்குள் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கத் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையத்தில் இருப்ப வர்கள் எங்களுக்கு தகவல்களை வழங்கத் தொடங்கிவிட்டனர். இது நிற்கப் போவதில்லை. வாக்கு திருடர்களை  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்” என அவர் கோரிக்கை விடுத்தார்.