tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமலாக்குமாறு மாநில அரசுகளை ஒன்றிய பாஜக அரசு

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமலாக்குமாறு மாநில அரசுகளை ஒன்றிய பாஜக அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. கேரள அரசு அதை நிராகரித்தது போல தமிழ்நாடு அரசும் நிராகரித்து மின்வாரியத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிராகரிக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், எஸ்.வெண்மணி உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.