tamilnadu

img

கேங்மேன் தொழிலாளர்கள் கைது சரியல்ல! பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண வேண்டும்!

கேங்மேன் தொழிலாளர்கள் கைது சரியல்ல! பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண வேண்டும்!

தமிழக அரசுக்கு சிபிஎம்  வலியுறுத்தல் சென்னை, அக். 8 - கள உதவியாளர்களாக பணிவரன் முறை செய்யக் கோரும் கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு, தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம்  தீர்வுகாண வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு வலியுறுத்தியுள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் வெளியிட்டுள்ள அந்த அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது: கைது நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் தொழிலா ளர்கள் தங்களைக் கள உதவியாளர் களாக பணி வரன்முறை செய்திட வலி யுறுத்தி 07.10.2025 முதல் தமிழ்நாடு  முழுவதும் 10 தலைமைப் பொறியாளர் கள் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னையில், கே.கே.நகர்  தலைமை பொறியாளர் அலுவலகம்  முன்பு அமைதியாக காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் நேற்றிரவு கைது  செய்து அதிகாலையில் விடுவித்துள்ள னர். அதைத்தொடர்ந்து, மீண்டும் இத் தொழிலாளர்கள்  புதனன்று காலையில்  போராட்டத்தில் இறங்கவே, காவல்துறை  கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது. பிற இடங்களில்  போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. கேங்மேன் தொழிலாளர்களின் நியா யமான கோரிக்கைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்குப் பதி லாக, காவல்துறை மூலம் தொழிலாளர் களை தமிழக அரசு கைது செய்துள்ளது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கல்ல. இது சரி யான ஜனநாயக நடைமுறையாகாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதிமுக ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி யாக உள்ள 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  காலிப் பணியிடங்களில் 28 ஆயிரம் கள  உதவியாளர்கள் பணியிடங்களும் அடங்கும். கடந்த 2019-ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் கள உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கு மாறாக, கேங்மேன் என்ற புதிய பதவியை  உருவாக்கியது. 2021-ம் ஆண்டு பலத்த  எதிர்ப்புக்கு மத்தியில் 10 ஆயிரம் பணி யாளர்கள் நேரடி நியமனம் மூலம் கேங் மேன் பணியில் அமர்த்தப்பட்டனர்.  இவர்களின் பணி வரன்முறைக்கு மாறாக, களப்பிரிவில் கள உதவியாளர் உள்பட காலியாக உள்ள இதர பல பதவிக் கான பணிகளையும் கேங்மேன் தொழி லாளர்களே நிறைவேற்றி வருகின்றனர்.  அமைச்சர் உறுதியளித்தும் நிறைவேற்றப்படவில்லை 2023ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை,  வெள்ளத்தின் போது கேங்மேன் தொழி லாளர்கள் அயராது பணியில் ஈடுபட்ட னர். அவர்களது பணியை அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் பாராட்டிய தோடு மட்டுமல்லாமல் அவர்களை கள உதவியாளர்களாக பணி வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.  இந்த அறிவிப்பை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மின்வாரிய அதி காரிகளை சந்தித்து தொடர்ச்சியாக முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக் கையும் எடுக்காததன் காரணமாகவே  தற்போது தொழிலாளர்கள் போராட்டத் தில் இறங்கியுள்ளனர். விரைந்து தீர்வு காண வேண்டும் எனவே, கைது போன்ற நடவடிக்கை களை கைவிட்டு, கேங்மேன் தொழிலாளர் களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.