tamilnadu

img

தமுஎகச தேனி மாவட்ட 9 வது மாநாடு கருத்தரங்கத்துடன் தேனியில் தொடங்கியது

தமுஎகச தேனி மாவட்ட 9 வது மாநாடு  கருத்தரங்கத்துடன் தேனியில் தொடங்கியது

தேனி,அக்.11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட  9 வது மாநாடு தேனியில் கருத்தரங்கத்து டன் தொடங்கியது. சங்கத்தின் மாவட்ட மாநாட்டினை முன்னிட்டு, சனிக்கிழமை கண்காட்சிகள் திறக்கப்பட்டது. எழுத்தாளர் பொன்.விஜ யன் நினைவு புத்தக கண்காட்சியை வர வேற்புக்குழு தலைவர் பா.ராமமூர்த்தி திறந்து வைத்தார். கடமலை கே.கோபால் நினைவு தொல்லியல் கண்காட்சியை மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.நடேசன், பெரியகுளம் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நினைவு ஓவிய கண்காட்சியை அறிவியல் இயக்க தலைவர் மகேஷ்வரன், கவிஞர்  கலை இலக்கியா நினைவு கண்காட்சியை  பொறியாளர் கண்ணன், எழுத்தாளர் பீர்  முகமது அப்பா நினைவு புகைப்பட கண் காட்சியை ஆசிரியர் இரா.மணிவண்ணன், சின்னமனூர் சு.ராஜகோபால் நினைவு படைப்புகள் அட்டைப்பட கண்காட்சியை மாவட்ட நிர்வாகி ந.சேதுராம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் தோழர்கள் இதயகீதன், போடி மாலன் நினைவரங்கில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு வரவேற்புக்குழு தலைவர் பா.ராம மூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்  குழு உறுப்பினர் ம.காமுத்துரை வரவேற்று  பேசினார். ‘அன்பே அறமென எழுக’ எனும்  தலைப்பில் மூத்த தலைவர் பேரா.அரு ணன் உரையாற்றினார். தி.வரதராஜன், தேனி வசந்தன், எஸ். நாராயணசாமி, கே.ராஜப்பன் உள்ளிட்ட  முன்னத்தி ஏர்கள் நிகழ்வில் பாராட்டப்பட்டனர். திண்டுக்கல் கலைக்குழு சார்பில் சும்மா  கிடந்த சுடலைமாடன் எனும் நாடகம் நடை பெற்றது. நாட்டுப்புற பாடல்கள், கவிதை கள் இடம்பெற்றது. மாவட்ட தலைவர் இதயநிலவன், மாவட்டச்செயலாளர் அய்.தமிழ்மணி, மாநி லக்குழு உறுப்பினர் தேனி.சீருடையான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று மாநாடு ஞாயிறன்று காலை 10 மணிக்கு பிரதி நிதிகள் மாநாடு நடைபெறுகிறது. மாவட்டப்  பொறுப்பாளர் ஜீவலட்சுமி தொடங்கி வைக்  கிறார். துணைப் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம் நிறைவு செய்து பேசுகிறார்.