தலைமைச் செயலக முற்றுகைக்குச் சென்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கைது
22 மையங்களில் 53-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
சென்னை, அக். 9 - ஒப்பந்த நிலுவை, ஓய்வுக்கால பலன்களை வழங்கக் கோரி வியாழனன்று (அக்.9) தலைமை செயலகத்தை முற்றுகையிடச் சென்ற போக்கு வரத்து தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் ஆங்காங்கே மறியல் நடைபெற்றது. 15-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவையை வழங்க வேண்டும், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 10 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், 2024 மே மாதம் முதல் ஓய்வுபெற்ற 2500 தொழிலாளர்களுக்கு ஓய்வுகாலப் பணப் பலன்களை தர வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 94 ஆயிரம் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 12(3) ஒப்பந்தப் படி ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்களும், ஓய்வூதியர்களும் ஆக.18 முதல், 22 மையங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 53 நாட்களாக நீடிக்கிறது. தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலம் இந்நிலையில், பல்லவன் இல்லத்திலிருந்து சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மே ளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயி னார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி. தயானந்தம், விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கனகராஜ் ஆகியோர் தலைமையில், தொழிலாளர்கள் ஊர்வலமாக தலைமை செயலகம் நோக்கிச் சென்றனர். இந்தத் தொழிலாளர்களை அண்ணா சாலை சந்திப்பில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் பேசுகை யில், “இந்தியாவிலும், தமிழகத்தில் வேறு எந்த துறையிலும் இல்லாத வகையில் ஓய்வுபெறும் தொழிலாளர்கள் வெறும் கையோடு அனுப்பப் படுகிறார்கள். 30 ஆண்டுகளாக சேமித்த பணத்தை பணி ஓய்வு பெற்ற ஒரு மாதக் காலத்திற்குள் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு மீறு கிறது. 17 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு 2500 கோடி ரூபாயை வழங்காமல் உள்ளது. இது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார். நிர்வாகம் செலவு செய்த ரூ.15 ஆயிரம் கோடி மேலும் பேசிய அவர், “தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பணத்தை உரிய நிறுவனங் களில் செலுத்தாமல் 15 ஆயிரம் கோடி ரூபாயை நிர்வாகம் செலவு செய்துள்ளது. இதனால் போக்கு வரத்து ஊழியர்களுக்கு வரவேண்டிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் உள்ள வர்களுக்கு ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய நிலுவையை 5 மாதங்களைக் கடந்தும் தராமல் உள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அரசின் பதவிக்காலம் முடியும் நிலையில் கூட அமல்படுத்தவில்லை. ஒப்பந்தப்படி ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுக்கின்றனர். நிறைவேற்றப்படாத வாக்குறுதி போக்குவரத்துக் கழகத்தில் பல்லாயிரக் கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. 5 ஆயிரம் பேர் வாரிசு வேலைக்காக காத்திருக் கின்றனர். அவர்களுக்கும் வேலை தர மறுக்கின் றனர். ஆனால், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங், பணிமனையை தனியாருக்கு கொடுப்பது போன்ற செயல்களில் அரசு ஈடுபடுகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அகவிலைப்படி மறுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டும் அகவிலைப் படியை வழங்க மறுக்கின்றனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் எப்போது வழங்கப்படும் என்று கூட அரசு கூற மறுக்கிறது. தொழிலாளர்களின் பணத்தை எடுத்து செலவு செய்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். அதனைத் திருப்பித் தர கேட்கிறோம். அதற்காக 53 நாட்களாக காத்திருக்கும் போராட்டம் நடத்துகிறோம். ஆனாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறார்கள், ஏன்? இதில், அரசும் தலையிடாத காரணத்தால் மறியல் நடைபெறுகிறது. காத்திருப்பு போராட்டம் தொடரும் இந்த போராட்டத்திற்கு வருகிறவர்களை காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்துள்ளது நியாயமற்றது. அர சின் அணுகுமுறை மோசமாக உள்ளது. இதன் பிறகும் அரசு தலையிடவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மறியல் நடைபெறும். இதற்குப் பிறகு மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை” என்றார். இவ்வாறு அவர் கூறினார். கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அ. சவுந்தர ராசன், “பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தம் செய்யாமல் உள்ளதை தொழிலாளர்களின் பலவீனமாக அரசு கருதக்கூடாது” என்றார். மேலும் 2 இடங்களில் மறியல் இதேபோல அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர். துரை தலைமையில் அண்ணாசாலை எல்ஐசி அலுவலகத்திலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாலாஜா சாலை வழியாக தலைமை செயலகம் நோக்கிச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர். பாலாஜி தலைமையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலி ருந்து பூந்தமல்லி நெஞ்சாலை வழியாக நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை - ஈவினிங் பஜார் சாலை சந்திப்பில் காவல்துறை யினர் தடுத்து கைது செய்தனர். இந்தப் போராட்டங்களில் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிஐடியு கண்டனம் : பக்கம் 3
