பயன்பாட்டில் இருந்த 1000மும் போச்சு, 2000 மும் போச்சு! சில்லறை தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் வியாபாரிகள்
ரூ.10 மற்றும் 20 ரூபாய் நோட்டு களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத் திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். சில்லறை தட்டுப்பாட்டின் தாக்கம் ஒரு காலத்தில் பண்டமாற்று முறை இருந்த இடத்தில், இன்று பணப் பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அன்றாட சிறு வியாபாரங்கள், தேநீர் கடைகள், காய்கறிக் கடை கள், சாலையோர உணவகங்கள் என பல்வேறு இடங்களில் ரூ.10, ரூ.20 ரூபாய் நோட்டுகளின் பயன் பாடு அதிகம் உள்ளது. ஆனால், தற்போது இந்த நோட்டுகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து, குமரன் என்ற வியாபாரி பேசுகையில், “டிஜிட் டல் பணப் பரிவர்த்தனைகள் அதி கரித்திருந்தாலும், தொழிலாளர் கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரொக்கப் பணம் பயன்பாடு குறை யவில்லை. ஒரு தேநீர் ரூ.12, சிற் றுண்டி ரூ.8 முதல் ரூ.10 என விற் கப்படுவதால், பெரும்பாலான பரி வர்த்தனைகள் ரூ.10, ரூ.20 நோட்டுகளில்தான் நடைபெறு கின்றன. இதனால் இந்த நோட்டு களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். கிழிந்த ரூபாய் நோட்டுகளும், வங்கி விதிமுறைகளும் தொடர்ந்து குமரன், “அதிக பயன்பாடு காரணமாக, புழக்கத் தில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.20 நோட் டுகள் கிழிந்து, கசங்கி, பயன்ப டுத்த முடியாத நிலைக்கு மாறிவிட் டன. இவற்றை வங்கிகளில் மாற் றச் சென்றால், 100 முதல் 200 நோட் டுகளை ஒன்றாகக் கொண்டு வந் தால் மட்டுமே மாற்றுவோம் என்று கூறுகின்றனர். இதனால் வியாபாரி கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகின் றனர். சில நேரங்களில் கூடுதல் தொலை கொடுத்து சில்லறை களைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்குக்கூட நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என வேதனை தெரிவித்தார். நாணயங்களின் நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10, ரூ.20 நாணயங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். ஆனால், பல்வேறு விழிப்புணர் வுகளுக்குப் பிறகு தற்போது அவற் றைப் பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர். இருந்தபோதிலும், புழக்கத்தில் உள்ள நாணயங்க ளின் எண்ணிக்கை மிகக் குறை வாக இருப்பதால், அவை ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாகப் பயன் படுவதில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர் கள் கூறுகையில், சமீப காலமாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளை போதிய அளவில் வெளியிட்ட தாகத் தெரியவில்லை. மேலும், தற்போது அச்சிடப்படும் நோட்டு களின் தரம் குறைவாக இருப்ப தால், அவை சீக்கிரம் கிழிந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிடுகின்றன. சராசரியாக 10 முறை பயன்படுத்திய உடனயே அவை கந்தல் நிலைக்குச் செல் கின்றன. இதைச் சரிசெய்ய, ஒன் றிய அரசும் ரிசர்வ் வங்கியும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். அதன்படி, புதிய ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளை போதுமான அளவில் புழக்கத்தில் விட வேண் டும். நோட்டுகளின் தரத்தை மேம் படுத்தி, அவை நீண்ட நாட்களுக் குப் பயன்படுத்தும்படி உறுதி யானதாக இருக்க வேண்டும். சேதமடைந்த ரூபாய் நோட்டு களை எளிதாக வங்கிகளில் மாற் றிக் கொள்வதற்கான விதிமுறை களை தளர்த்த வேண்டும். லட்சக்கணக்கான ரூபாய் வரு மானம் ஈட்டும் செல்வந்தர்களுக்கு இந்த சில்லறை தட்டுப்பாடு ஒரு பெரிய பிரச்சனையாக இருக் காது. ஆனால் அன்றாட வாழ்க் கைக்கு சில்லறைகளை நம்பியி ருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின ருக்கும் சிறு வியாபாரிகளுக்கும் இது பெரும் சுமையாக உள்ளது. எனவே, இந்தப் பிரச்சனைக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எம்.பிரபாகரன்