பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்
சென்னை: 1914 இல் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் தீவையும் பாம்பனையும் இணைக்கும் 2.3 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. 2022இல் இருந்து இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிய தூக்கு பாலம் கடந்த ஏப்ரலில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப் பட்டது. இந்நிலையில், பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ரயில் விகாஸ் நிகாம் நிறு வனம் சார்பில் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந் தாய்வு ஆகஸ்ட் 26 அன்று நடைபெறும்.