ஆசிரியர் தின விழா
பாபநாசம், செப். 5- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர் முகம்மது இர்த்திக் வரவேற்றார். அறங்காவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தலைமைச் செயலாளர் வரதராஜன், நிர்வாகச் செயலாளர் அண்ணாதுரை, பள்ளிச் செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறங்காவலர்கள் இளவரசி, ஜெயராமன், பூவானந்தம், ராஜேந்திரன் உள்ளிட்ட மாணவர்கள் வாழ்த்திப் பேசினர். நல்லாசிரியர் பொய்கை, ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு அளித்துப் பேசினார். பள்ளியின் பிளஸ்-2 மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கினர். பள்ளி முதல்வர் தீபக், துணை முதல்வர் சித்ரா, ஆசிரியர்கள் ஏற்புரையாற்றினர். மாணவி லாவண்யா நன்றி கூறினார்.