tamilnadu

img

தமுஎகச அறந்தாங்கி மாநாடு

தமுஎகச அறந்தாங்கி மாநாடு

அறந்தாங்கி, ஆக. 21-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு புதன் அன்று ஐடியல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இந்த மாநாட்டிற்கு தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர். இராசி பன்னீர்செல்வம் முன்னிலையில் வகித்தார். ஆசிரியர் மாணிக்கம் வரவேற்றுப் பேசினார். ராஜசேகரன், சரவணமுத்து, முகமது முபாரக் ஆகியோர் கவிதை வாசித்தனர். செயலாளர் ஸ்ரீ பாஸ்கரன் அறிக்கை சமர்பித்தார். 9 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யபட்டது. பி. ஷேக் சுல்தான் தலைவராகவும், கபார்கான், தர்மலிங்கம், கே.பால்ராஜ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஸ்ரீ பாஸ்கரன் செயலாளர்களாகவும், ஆசிரியர் மாணிக்கம், முனைவர் முபாரக் அலி, முனைவர் அக்பர் அலி கசாலி ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும், கவி கார்த்திக் பொருளாளராகவும் தேர்வு செய்யபட்டனர். வழக்கறிஞர் வெங்கடேசன், கவிஞர் கவிவர்மன் வாழ்த்திப் பேசினார்கள். மாநில துணைச் செயலாளர் ஶ்ரீ ராசா கருத்துரையாற்றினார். நிறைவாக மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி சிறப்புரையாற்றினார். கபார்கான் நன்றி கூறினார்.