tamilnadu

img

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் கரூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜூ, கே.சக்திவேல், சி.ஆர்.ராஜாமுகமது, மாநகர செயலாளர் எம் .தண்டபாணி மற்றும்  மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.