சாதி வெறுப்புக்கு எதிராக குரல்! தமுஎகச கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி, செப்.6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் 9 ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை (செப்.5) கரிசல்குயில் சின்னசாமி நினைவு மேடை மணிக்கூண்டு திடல் உளுந்தூர் பேட்டையில் மாவட்டத் தலைவர் கு.சுதா தலைமையில் நடைபெற்றது. கே.தங்கராசு வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் க.வேலாயுதம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு வே.ராஜசேகர் பண்பாட்டு அறிக்கையை வாசித்தார், மாவட்டப் பொருளாளர் வேலா. கந்தசாமி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். “அன்பே அரண் அறம் என எழுக" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆதவன் தீட்சண்யா, “ஆண், பெண், மாற்று பாலினத்தவர் என்ற பாகுபாடு அறவே கலைந்து பிறப்பால் அனை வரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்றார். "கீழடி எங்கள் தாய்மடி" என்ற தலைப்பில் உரையாற்றிய களப்பிரன், “கீழடி என்ற வார்த்தையை முதன் முதலில் தமுஎகச மேடையில்தான் உச்சரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அமைப்பின் மதிப்பீடு தலைவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் சங்க மாநாட்டில் இந்த தலைப்பில் பேசியதையும் நினைவுகூர்ந்தார். மாநில துணைப் பொதுச் செய லாளர் உமா.அமர நாதன்,அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.மகாலிங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன்,மாவட்டத் தலைவர் கு.சுதா, க.வேலாயுதம், பி.ஸ்டாலின், வேலா. கந்தசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். நிர்வாகிகள் தேர்வு 17 பேர் கொண்ட மாவட்ட குழு வின் தலைவராக வேலா. கந்தசாமி, செயலாளராக கு.சுதா,பொருளாளராக வெ.ராஜசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.