தென்னிந்திய டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக வீரர் எத்திராஜன்
சென்னை, அக்.13- தென் இந்திய மாநிலங்களுக்கிடையே டேபிள் டென்னிஸ் போட்டி கர்நாடக மாநிலம், மல்லிஸ்வரத்தில் அக்டோபர் 4,5,6 தேதிகளில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் இரா.எத்திராஜன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். முன்னதாக அவர் நித்தின் மஞ்சல்கரை (கர்நாடகம்), 3 க்கு 1 என்ற செட் கணக்கிலும் சிம்ஹாவை (தெலங்கானா) 3-2 என்ற செட் கணக்கிலும் வென்றார். அரிகிருஷ்ணாவை (ஆந்திரா) 3-0 என்ற ஸ்கோர் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் கர்நாடகா வீரர் பாஸ்கர் அவர்களிடம் 3-2 என்ற கணக்கில் இரா எத்திராஜன் வெற்றி வாய்பை இழந்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய எத்திராஜனுக்கு ரன்னருக்கான கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
