தொழிற்சாலைகள் மூலம் அதிகமான வேலைவாய்ப்பு வழங்கும் தமிழகம் அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்
சென்னை, செப். 2- இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் மூலம் அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழகம் தான் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே 3,201 கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்துள்ள நிலை யில், Knorr-Bremse நிறுவனத்தைக் குறிப்பிட்டு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், நயினாரின் கேள்வியா னது, தொழில்துறை சார்ந்த அவரின் புரிதல் குழந்தைத்தனமாக உள்ளதையே காட்டுவதாக விமர்சித்துள்ளார். Knorr-Bremse 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனமாகும். இதற்கு முன்பு, தமிழகத்தில் அவர்களுக்கு உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில், திமுக அரசின் முயற்சிகளால் அவர்களது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலு வலகம் தொடங்கப்பட்டது. தற்போது 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத் தில் அவர்களது முதல் ரயில் பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய உயர்தர வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசே புள்ளிவிவர அறிக்கையுடன் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தை இழிவுபடுத்தும் போக்கை பாஜக தலை வர் கைவிட வேண்டும் என்றும் கூறி யுள்ளார்.