tamilnadu

img

ஒன்றிய புள்ளிவிவரங்களே உண்மையைச் சொல்லும்... ஜவுளி உள்பட 7 துறைகளில் தமிழ்நாட்டிற்கே முதலிடம்!

பிரதமர் மோடிக்கு திமுக பதிலடி

சென்னை, ஏப்.14- இந்தியாவிலேயே ஜவுளித்துறை உட்பட  7 துறைகளில் தமிழ்நாடு தான் முதலிடத்தில்  இருப்பதாக- பிரதமர் மோடியின் விமர் சனத்திற்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. அந்த அறிக்கை வருமாறு: “மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக  காணாமல் போய்விடும் என்று கூறிய பிரதமர்  என்னும் ‘பெரிய பதவியில்’ உள்ளவர் திமுக வின் வரலாறு தெரியாமல் சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து வாய்  ஜாலம் காட்டினார்.  அவர் தலைமையில் இதுவரை இயங்கிக்  கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் ஆய்வு  அமைப்புகள் தமிழ்நாட்டின் உண்மை நிலை யினை விளக்கி ஆய்வு அறிக்கைகளை வெளி யிட்டுள்ளன. சில நாட்களுக்குமுன் 7 துறைகளில் தமிழ்  நாடு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்  பதை ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டன. தற்போது, மேலும் 3 துறைகளில் தமிழ்  நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம்  என்பதை தம்முடைய ஆய்வு அறிக்கை களின் மூலம், அறிந்தும் அறியாமல் – புரிந்  தும் புரியாமல் – இழித்தும் பழித்தும் திமுக வை பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய ‘பெரிய பதவியில்’ உள்ளவர்களுக்கு மீண்  டும் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துள்ளன.

ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் - தமிழ்நாடு முதலிடம்

ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022- 2023-ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை யை ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவிகிதம் என அறிவித்து ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, “இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர். இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன்  அமெரிக்க டாலர். இரண்டாம் இடத்தில் குஜ ராத் மாநிலம் 4.378 பில்லியன் அமெரிக்க  டாலர். மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரம் 3.784  பில்லியன் அமெரிக்க டாலர்” என்று குறிப்  பிட்டு ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கியப் பங்கு  வகிக்கிறது என்பதை வெளிப்படுத்தி யுள்ளது.

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முதலிடம் 

2022-2023-ஆம் ஆண்டுக்கான தேசிய இறக்குமதி – ஏற்றுமதி – வர்த்தக ஆண்டாய்வு  பதிவுகள் குறித்த அறிக்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்து அறிவித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.  அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் அமெ ரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடை களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியா வில் முதல் மாநிலமாக உள்ளது என்று அறி வித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெ ரிக்க டாலர். உத்தரப்பிரதேசம் மூன்றாம் இடத்  தில் 2.27 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பி லான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்  துள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மராட்டி யம், குஜராத் மாநிலங்கள் மிகவும் பின்தங்  கிய நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட் டுள்ளது. ஒன்றிய அரசின் பிரதமரும், ஒன்றிய அரசின் அமைச்சர் பெருமக்களும், பாஜக உடன் கள்ள உறவு வைத்துள்ள  அதிமுகவினரும் தமிழ்நாட்டின் வளர்ச்சி களைப் பற்றிக் குறைகூறி வருவது உண்  மைக்கு மாறானது மட்டுமல்ல, உண்மை களை மறைத்து பொய்களைக் கூறி, போலி யான விளம்பரம் தேடுபவர்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாகப் பொதுமக்களுக்கு ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக்  காட்டுகிறது. இவ்வாறு திமுக கூறியுள்ளது.