அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் தமிழக தொழில்களுக்குப் பாதிப்பு
பிரதமர் தலையிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஆக. 16 – இந்தியப் பொருட்கள் மீது, அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவிகித வரியால், தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுக்கத் தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடி தம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கடந்த நிதியாண் டில், 433.6 பில்லியன் டாலர் மதிப்பி லான இந்தியாவின் மொத்த பொருட் கள் ஏற்றுமதியில் 20 விழுக்காடு அமெ ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளது. அதேபோல தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 52.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களில் 31 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்று மதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிக மாகச் சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் என்றும், இந்த வரிவிதிப்பு தமிழ்நாட் டின் உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப் பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிவிதிப்பினால் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோ மொபைல்ஸ், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட் டுள்ளதாகவும், இந்தத் துறைகள் அனைத்தும் அதிகத் தொழிலாளர் களை சார்ந்தவை என்பது இன்னும் கவலைக்குரியது என்றும், இதில் எந்தவொரு ஏற்றுமதி மந்தநிலையும் விரைவாக பெருமளவிலான பணி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமருக்கான தனது கடிதத்தில் முதலமைச்சர் கவலைபடத் தெரிவித் துள்ளார். 2024-2025ஆம் ஆண்டில் இந்தியா வின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28 விழுக்காட்டை பங்களித்தது என்றும், இது இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்க ளைக் காட்டிலும் மிகவும் அதிகம் என் றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக, தமிழ்நாட் டில் ஜவுளித் துறை கிட்டத்தட்ட 75 லட் சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித் துள்ளதாகவும், ஆனால், 25 விழுக்காடு வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50 விழுக்காடு வரியின் காரணமாக, 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபா யம் உள்ளதாகவும், இந்த நெருக்கடி யைத் தணிக்க, நமது ஏற்றுமதி போட்டித் தன்மைக்கு நீண்டகாலமாகத் தடையாக இருக்கும் கட்டமைப்பு சிக் கல்களைத் தீர்ப்பது அவசியம் என்று தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டி யுள்ளார். தமிழ்நாட்டின் வலுவான உற்பத் தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள் வதாகவும், பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளா கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின்,இந்தியப் பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் அவசரமாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற் றும் தொழில்துறையைச்சார்ந்த வர் களுடன் கலந்தாலோசித்திட வேண்டு மென்று கேட்டுக் கொண்டுள்ளார்.