tamilnadu

img

இனச் சான்று வழங்கக் கோரி டிச.16-இல் காத்திருப்புப் போராட்டம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவிப்பு

இனச் சான்று வழங்கக் கோரி டிச.16-இல் காத்திருப்புப் போராட்டம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவிப்பு

திண்டுக்கல், அக்.7 - பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக அனைத்து கோட்டாட்சியர், சார்  ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு டிச.16 ஆம்  தேதி காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. பழனியில் அக்.5,6,7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் 10 ஆவது மாநில மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வன உரிமை சட்டத்தை முழுமையாக அம லாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பெறப் பட்ட மனுக்களை விசாரித்து பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு வன உரிமை சட்டத்தின் படி விரைந்து நிலப்பட்டா வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அரசாணை  104 (21.8.2023) முழுமையாக தமிழ்நாடு முழுவ தும் அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், சார் ஆட்சியர்கள் அமலாக்க வேண்டும். பெற் றோர்களுக்கு இனச்சான்று இருப்பின், அவர் களது பிள்ளைகளுக்கும் இனச்சான்று வழங்க வேண்டும்.  தமிழகத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் மலைப் பகுதிகளில் அவர்களது பூர்வீக நிலங்க ளுக்கும், பாரம்பரியமாக வீடுகட்டி வாழ்ந்து வரும் அவர்களது வீடுகளுக்கும் பட்டா வழங்க  வேண்டும். பழங்குடியின மக்கள் நிலங்களை, பழங்குடியினர் அல்லாதோர் வாங்கினால் செல்லாது என்ற அரசாணையை அனைத்து மலைப் பகுதிகளிலும் அமலாக்கிட வேண்டும்.  25 ஆண்டு காலமாக போராடும் மலை வேடன், காட்டுநாயக்கன் மக்களுக்கு 104 அரசா ணையின்படி உடனே இனச்சான்று வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மலை கிரா மங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி டிசம்பர் 16 அன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வரு வாய் கோட்டாட்சியர், சார் ஆட்சியர், அலுவல கங்கள் முன்பாக கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக பி.டில்லிபாபு, பொதுச் செயலாளராக ஆ.பொன்னுச்சாமி, பொருளா ளராக ஏ.வி.சண்முகம், மாநிலத் துணைத்  தலைவர்களாக பெ.சண்முகம், ஆர்.தமிழரசன்,  இ.கெங்காதுரை, எல்.ஜெயராமன், ஜி.ஆர். பிரகாஷ், அய்யனார், மாநிலச் செயலாளர் களாக இரா.சரவணன், தர்மலிங்கம், எம்.அழ கேசன், செஞ்சியம்மா, தா.அஜய்கோஷ் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.