tamilnadu

img

இளைஞர் அஜித் குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு!

இளைஞர் அஜித் குமார் மரண வழக்கை  சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு!

சிவகங்கை, ஜூலை 1- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலர் அஜித் (30) அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக 6 போலீசார் கைது செய்யப்பட்டதுடன், மானாமதுரை டிஎஸ்பி  சண்முகசுந்தரம் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதன் அடுத்தகட்டமாக ஒட்டுமொத்த வழக் கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மடப்புரம் கோவில் காவலராக பணியாற்றிய வர் அஜித்குமார். கடந்த வெள்ளிக்கிழமையன்று கோவிலுக்கு வந்த ஒரு பெண்மணியின் நகை திருடு  போன விவகாரத்தில் அஜித்குமார் உள்ளிட்ட நான்கு பேரை காவல் நிலையத்தில் வைத்து விசா ரித்த போலீசார், அஜித்தை தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டு, அஜித்தை கோவில் வளாகத்தில் உள்ள மாட்டுக் கொட்டகை, தனியார் தோட்டம் என வெவ்வேறு இடங்களில் தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்கி சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இதில் அஜித் உயிரிழந்தார். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட்  ஆகியோர் அமர்வு முன்பு செவ்வாயன்று (ஜூலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கை காவல் துறை உரிய முறையில் விசா ரிக்கவில்லை, அஜித் குமார் மரணமடைந்த பின்னரே நகை காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர். இவர்  அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்தது விதி மீறுவதாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று  பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், தமிழக காவல்துறைக்கு அடுக்கடுக்கான பல கேள்வி களை முன்வைத்தனர். “நகை காணாமல் போன வழக்கில் முதல் தக வல் அறிக்கை ஏன் உடனே பதிவு செய்யப்பட வில்லை? யாருடைய உத்தரவின் பேரில் விசா ரணை, சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? யார் சொல்லி இந்த வழக்கை கையில் எடுத்தார் கள்? சிறப்புப் படையினர் தாங்களாகவே வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? உடனடி யாக எஸ்.பி.யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்? புலனாய்வு செய்யத்தானே காவல்  துறை இருக்கிறது அடிப்பதற்காகவா காவல்துறை  இருக்கிறது?” என கேள்விகளை எழுப்பினர். பிற்பகலில் அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையை மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் 45  இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரி விக்கப்பட்டு இருந்தது. தங்களின் மகன், மடப்புரம் கோவில் வளா கத்தில் மாட்டு கொட்டத்தில் வைத்து தாக்கப்படும்  வீடியோவை அஜித்குமாரின் குடும்பத்தினர் உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அப்போது பேசிய நீதிபதிகள், “திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர்  அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார், போலீசார் கூட்டாக சேர்ந்து இந்த கொடூரமான செயலைச்  செய்துள்ளனர். அஜித்குமார் கொலை வழக்கில்  அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.  சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தாக அரசு உறுதி கூறியுள்ளது. வருங்காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது. கல்வியறிவு அதிக முள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இது போன்ற நிகழ்வு ஆபத்தானது. இது தொடர்பான  விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2  நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது” என்று  கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். நீதித்துறை நடுவர் உடனடியாக விசார ணையைத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை யாரும் மறைக்கக் கூடாது என்றும் கூறினர். முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வரு வதற்கு முன்பாகவே, அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 போலீ சார் கைது செய்தும், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை தற்காலிக பணிநீக்கம் செய்ததுடன், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை காத்தி ருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.  அதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த வழக் கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அஜித்குமாரின் தாயாருக்கு கைப்பேசியில் முதலமைச்சர் ஆறுதல்

மடப்புரத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கைபேசி மூலமாக பேசி ஆறுதல் கூறினார். இளைஞர் அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன் ஆகிய இருவரும் மடப்புரத்தில் வசித்து வரும் நிலையில், அவர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கைபேசி வழியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அஜித்குமாரின் தாயார் மாலதியிடமும் சகோதரர் நவீனிடமும் பேசி ஆறுதல் கூறினார். அஜித்குமாரின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார்.