tamilnadu

மனித உரிமைகள் ஆணைய உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

மனித உரிமைகள் ஆணைய  உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

சென்னை, ஆக.12 - விவசாயிகள் சங்கத் தலைவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், மாநில மனித உரி மைகள் ஆணையம் கொடுத்த உத்தரவை  செயல்படுத்திட நீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் சட்ட மன்ற  உறுப்பினருமான பி.டில்லிபாபு தலை மையில், சென்னை -சேலம் எட்டு வழிச்சா லைக்காக தமிழக அரசு நிலம் கையகப் படுத்தியதை கண்டித்து கடந்த 2018 ஜூன் 26  அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செங்கம் அருகே மண்மலை கிரா மத்தில் கருப்புக் கொடி போராட்டம் நடை பெற்றது.  இதில் பங்கேற்ற பி.டில்லிபாபுவை, டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில், எட்டுக் கும் மேற்பட்ட  போலீசார், அவரை வலுக் கட்டாயமாக இழுத்து கடுமையாக தாக்கி னர். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனித  உரிமை மீறல் என கூறி, மாநில மனித உரிமை கள் ஆணையத்தில் பி.டில்லிபாபு வழக்கு தொடர்ந்தார்.  இதனை ஆய்வு செய்த மனித உரிமை கள் ஆணையம், செங்கம் டிஎஸ்பி சுந்தர மூர்த்தி மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிஎஸ்பி சுந்தர மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்  தாக்கல் செய்தார். வழக்கை ஆய்வு செய்த  நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததோடு,  மனித உரிமைகள் ஆணையத்தின் உத்த ரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.  மாநில மனித உரிமைகள் ஆணையம் கொடுத்த உத்தரவை செயல்படுத்திட நீதிமன் றம் வலியுறுத்தியுள்ளதை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். அதே நேரத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரான பி.டில்லிபாபு தாக்கிய விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மீது துறைரீதி யான நடவடிக்கைகளை எடுத்திட தமிழ்நாடு  அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.