tamilnadu

img

அமெ. துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்-க்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

அமெ. துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்-க்கு  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

கம், தடையற்ற இறக்குமதி, வரி விதிப்பு கொள்கைகளுக்காக இந்தியா வந்துள்ள, அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸின் படத்தை எரித்து, தஞ்சாவூா் பழைய பேருந்துநிலையம் அருகே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலா் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், கரும்பு விவசாயிகள் சங்கச்  செயலா் பி. கோவிந்தராஜ், விவசாய சங்கத் தலைவா்கள் ரமேஷ், அறிவ ழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.  திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புறநகர், மாநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் துவாக்குடி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கருணாநிதி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் கே.சி. பாண்டியன், மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் கணேசன், சிபிஎம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார், தெற்கு ஒன்றியச் செயலாளர் குருநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.