tamilnadu

உலக நாடுகளில் உச்சரிக்கப்படும் தமிழ்மொழி குமரி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் பேச்சு

உலக நாடுகளில் உச்சரிக்கப்படும் தமிழ்மொழி  குமரி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் பேச்சு

நாகர்கோவில்,ஆக.29- கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில் நாகர்கோவில் ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரி கலையரங்கில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் மாணவியர்களிடையே பேசுகையில், தமிழ்நாட்டின் ஒற்றுமைக்காக பல்வேறு தமிழறிஞர்கள் போராடியது குமரி மாவட்டத்தில்தான்.     தொல்காப்பியர், அதங்கோட்டாசான் உள்ளிட்டவர்கள் வாழ்ந்த இடம் கன்னியாகுமரி மாவட்டம். குறிப்பாக தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் ஔவையாருக்கென மூன்று கோவில்கள் உள்ளன. உலகில் செழுத்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையானது தமிழ்பண்பாடு. தமிழர் மரபு, தமிழர் தொன்மை உள்ளிட்டவைகளை இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதன் வாயிலாக ஆரோக்கியமான சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பதே தமிழ்  கனவின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.   சொற்பொழிவாளர் செந்தில்வேல் உரையாற்றினார். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர்  காளீஸ்வரி, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி முதல்வர் முனைவர் சகாயமேரி மற்றும் துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.