சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான களத்தில் தீ.ஒ.மு. கண்காட்சித் தொகுப்பை து. அரிபரந்தாமன் வெளியிட்டார்!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-வது மாநில மாநாடு 2025 ஆக 31, செப் 1 ஆகிய இரு நாட்கள் மயிலாடுதுறையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு ‘சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான களத்தில்...’ என்ற இணையவழி கண்காட்சி தொகுப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் செவ்வாய்க்கிழமை (12.08.2025) வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நிகழ்த்திய உரையில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். அதன் வீடியோ லிங்க் : https://sendgb.com/Z2qOFfMyUs6.