பயங்கரவாதிகள் என்று சந்தேகித்து அவர்களின் குழந்தைகளை மோசமான வகையில் நடத்தியதாக பிரான்சின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அம்ப லப்படுத்தியுள்ள ஐக்கிய நாடு கள் சபையின் குழந்தை உரி மைகள் குழு பிரான்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தோடு, சிரியாவின் முகாம்க ளில் அடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் குழந்தை களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஹோண்டுராஸ் நாட்டு ராணுவத்தின் தலைமைத் தளபதியாக அந் நாட்டு ஜனாதிபதி சியாமரோ காஸ்ட்ரோ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், ராணுவத்தில் உள்ள அனைத்து பெண்களுக் கும் நான் ஆதரவாக நிற்பேன். படைக்குள் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்து வேன். ராணுவத் தளவாடங்க ளை மேம்படுத்தத் தேவை யான அனைத்துத் தேவைக ளையும் அளிக்க முயற்சி செய் வேன். நாட்டின் சிறைத்துறை யை ராணுவம் நிர்வகிப்பது சிறிது, சிறிதாகக் குறைக்கப் படும் என்று தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை சார்ந்த பிரிட்டன் சஞ்சிகையான வாண்டர்லஸ்ட், மார்ச் மாதத் தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த 20 இடங்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 20 இடங்கள் இடம் பிடித்துள்ளன. அதில் வியட் நாமும் உள்ளது. வியட்நாமின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற் கொள்ள இதுதான் சரியான நேரம் என்று அந்த இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.