கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை
புதுதில்லி, ஆக. 25 - தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகத்தின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு உத்தர விட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், அமைப்புகள் சம்பந்தப்பட்ட கொடிகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி இளந்திரை யன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் யப்பட்டது. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இயற்கை நியதிக்கு புறம் பானது என்று கூறியதுடன், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது. அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், விஜயகுமார், எஸ். சவுந்தர் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவால் தாங்கள் பாதிக்கப் படுவதாக அரசியல் கட்சிகள் கருதினால் நீதி மன்றத்தை அணுகி இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டனர். இதற்கிடையில், கொடிக்கம்பங்களை அகற்றுவது சம்பந்தமாக அம்மாசித் தேவர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, மூன்று நீதிபதிகள் அமர்வானது, சிபிஎம் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு (SLP) தாக்கல் செய்தார். வழக்கறிஞர் எஸ். பிர சன்னா ஆஜராகி மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன்பு திங்களன்று (25.8.2025) விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முரளீதர், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்க றிஞர்கள் திருமூர்த்தி, பிரசன்னா, சதீஸ்குமார் ஆகியோர் ஆஜராகி வாதங்களை வைத்தனர். இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் முரளீதர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், சமுதாய இய க்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது என்றும் உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்குமாறு நோட் டீஸ் பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்தது.
தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
“கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கை க்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கொடிக்கம்பங் களை அகற்றக் கூடாது என்றும் உத்தர விட்டுள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்” என கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.