பாஜக ஆளும் அருணாச்சல் முதலமைச்சர், குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல மைச்சராக பெமா காண்டு உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர். பல ஆயிரம் கோடி முதலமைச்சர் பெமா காண்டுவின் மனைவி க்குச் சொந்தமான “பிராண்ட் ஈகிள்ஸ் (M/s Brand Eagles)”, அவரது மருமகனும் தவாங் தொகுதி எம்எல்ஏ-வுமான செரிங் தாஷிக்குச் சொந்தமான “அலையன்ஸ் டிரேடிங் (M/s Alliance Trading Co)” ஆகிய நிறுவனங்களுக்கு விதிகளை மீறி பல ஆயிரம் கோடி ரூபாய் (20,000 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது) மதிப்பி லான அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல ரூ.1,270 கோடி மதிப்பிலான ஒப்பந் தங்கள் முதலமைச்சரின் நெருங்கிய உறவினர்க ளுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் உத்தரவின் பேரிலேயே இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் அரு ணாச்சல் பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐ விசாரணை இத்தகைய சூழலில், “சேவ் மோன் ரீஜன் பெடரேஷன் (Save Mon Region Federation)” மற்றும் “வாலன்டரி அருணாச்சல் சேனா (Volun tary Arunachal Sena)” ஆகிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சா ரியா அடங்கிய அமர்வு முன் திங்களன்று விசார ணைக்கு வந்தது. வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதி பதிகள்,“அருணாச்சலப் பிரதேச முதல மைச்சர் பெமா காண்டுவின் உறவினர்களு க்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, அரசு ஒப்பந்தங்கள் முறைகேடாக வழங்கப்பட்ட தாகக் கூறப்படும் புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) உத்தரவிடப்படுகிறது. 2015 ஜனவரி 1 முதல் 2025 டிசம்பர் 31 வரை வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சிபிஐ ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இந்த காலக்கட்டத்திற்கு வெளியேயும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. தனிப்பட்ட விரிவான விசாரணை அவசி யமா என்பது குறித்து 16 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக மாநில அரசும் சம்பந்தப்பட்ட துறைகளும் சிபிஐ-க்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடுத்த 4 வாரங்களுக்குள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு ஆவணமும் அழிக் கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிபிஐ-யுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில தலைமைச் செயலாளர் ஒரு வாரத்திற்குள் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
