போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு
அரசு போக்குவரத்து தொழிலாளர் 60 நாள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் காத்திருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள்சங்கம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் ரூ.10ஆயிரம் போராட்ட நிதியாக வழங்கப்பட்டது. இதில் இரா.சரவணன், கே.நேரு, என்.சாரங்கன், எம்.அழகேசன், எல். முருகேசன், கே.செல்லம், அஞ்சலி மற்றும் வாலிபர் சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.கோகுல் பாரதி கலந்து கொண்டனர். எ.அன்பழகன் நிதியை பெற்றுக்கொண்டார்.
